Home ஆண்கள் ஆண்மை பெருக மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை

மலட்டுத்தன்மையை நீக்கும் மண்பாண்ட சமையல்: நிபுணர்கள் அறிவுரை

73

குழந்தை இல்லா குறை என்பது இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகளிடம் காணப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தையின்மை குறையை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

இன்றைக்கு எதற்கெடுத்தாலும் ரெடிமேட் உணவுகளையோ, மசாலாக்களையோ உபயோகிக்கின்றோம். செயற்கை உணவுகளும் ரசாயன உரங்களும் உடம்பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. உயர் ரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வரை மனிதர்களை தாக்குவதோடு மலடாகவும் மாற்றிவிடுகிறது. மலட்டுத்தன்மையை தடுக்க உணவுகளை எவ்வாறு உண்ணவேண்டும், எவற்றை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

 

இன்றைக்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை இளைய தலைமுறையினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது தவறான நடைமுறையாகும். அன்றாடம் புதிதாக சமைத்த உணவுகளை உண்ணவேண்டும் அதுதான் ஆரோக்கியம்.

ரெடிமேட் மசாலாக்கள்

பண்டைய காலங்களில் செயற்கை நிறம், மணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஃபாஸ்ட் புட் போன்றவை இல்லை. ஆனால் இன்றைக்கு மஞ்சள்தூள் தொடங்கி மிளாகாய்த்தூள், சாம்பார் பவுடர் என கலர் கலராய் ரெடிமேட் மசாலா உணவுப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் செயற்கை மணத்திற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கைப் பொருட்கள்தான் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

 

இந்த செயற்கை மசாலாத்தூளில் எடையை அதிகரிப்பதற்காக அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்க்கப்படுவதாக சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த கிழங்குமாவு கெட்டுவிடும் என்பதால் அதற்காக பிரசர்வேடிவ் சேர்க்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

சினைப்பை நீர்க்கட்டி

 

பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸார்டர்(பிசிஒடி) என்ற சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கச் செய்யும் மிகப்பெரிய மருந்து மிளகு ரசம். மிளகு, சீரகம், பூண்டு, கட்டிப்பொருங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் இந்த ஓவரியன் நீர்க்கட்டிகள் தன்னால் கரையும் என்கின்றனர் மருத்துவர்கள். இதேபோல் கொள்ளுரசம் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள்.

விந்து உற்பத்தி அதிகரிக்க

 

சின்ன வெங்காயம் சாம்பார் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். நல்லெண்ணையில் சின்ன வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டாலும் ஆண்களுக்கு விந்து உஉற்பத்தி அதிகமாகும்.

திராட்சை, உலர்திராட்சைப் பழங்கள், சோயா, வால்நட், முருங்கைப் பூ போன்றவை பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும். மலட்டுத்தன்மையை குணமாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மண்பானை சமையல்

 

பண்டைய காலங்களில் வீடுகளில் மண்பாண்டங்களில் சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து, ஆறு குழந்தைகளை கூட பெற்று ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைக்கு சமைக்கும் பாத்திரங்களும், முறைகளும் கூட மாறிவிட்டன. இதனால்தான் விந்தணு உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது. மண்பானையில் சமைத்தால் விந்து நீர்த்துப்போவதை தடுக்கும். விந்துவை கெட்டிப்படுத்துவதோடு உற்பத்தியை அதிகமாக்கும்.

 

மண்பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும். சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.