Home சமையல் குறிப்புகள் கூர்க் மட்டன் மசாலா ப்ரை

கூர்க் மட்டன் மசாலா ப்ரை

50

கூர்க் பகுதியின் பாரம்பரிய உணவான மட்டன் மசாலா ப்ரையை செய்து கொடுத்து அனைவரையும் அசத்துங்கள்!

மிகவும் எளிதில், வேகமாகவும், ருசியாகவும் சமைக்க வேண்டுமா? ஞாயிற்றுக்கிழமை எப்போதும் போல் அசைவம் எடுத்தாச்சு… அதை எப்போதும்போல் சமைக்காமல், வித்தியாசமாக ட்ரை பன்னுங்க… உங்களுக்கான ரெசிப்பி…

தேவையான பொருட்கள்:

# மட்டன் – 1 கிலோ
# மிளகாய் தூள்- 3 டீஸ்பூன்
# மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
# வெங்காயம்- 5 அல்லது 6
# கடுகு-1/4 டீஸ்பூன்
# கிராம்பு- 3-4
# சீரகம்- 1/2 டீஸ்பூன்
# மிளகு-1 டீஸ்பூன்
# மல்லி- 3 டேபிள் ஸ்பூன்
# இலவங்கப்பட்டை- 1
# ஏலக்காய்- 2
# சமையல் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
# உப்பு- தேவையான அளவு

செய்முறை:

# நன்கு கழுவிய மட்டனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

# இதனை குக்கரில் வைத்து தண்ணீர் கலக்காமல் நன்கு வேக வைக்கவும்.

# ஒரு கடாயில், கிராம்பு, சீரகம், இலவங்க பட்டை, கடுகு, ஏலக்காய், மல்லி, மிளகு சேர்த்து வெண்ணிறத்தில் வறுக்கவும்.

# வறுத்த கலவையை மசாலா போன்று நன்கு அரைத்துக்கொள்ளவும்.

# கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில் வெங்காயம், உப்பு சேர்த்து வெண்ணிறத்தில் வதக்கவும்.

# இதில் வெந்த மட்டனை கொட்டி நன்கு கொதிக்கவிடவும்.

# இதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து, கலக்கவும்.

# குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

கூர்க் மட்டன் ப்ரை தயார்…