Home ஆண்கள் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?

31

குழந்தையின்மைக்கு ஒரு பெண் காரணம் எனும்போது அவள் அடையும் அதிர்ச்சியை விட, ஆண் காரணம் என அறியும்போது அதிகமாக பாதிப்பு அடைகிறான். இனி தான் எதற்குமே லாயக்கில்லை என்று எண்ணுகிறான்.

பிறவிக்குறைபாடு காரணமாக ஏற்பட்டிருக்கும் விந்தணுக்குறைபாடு தவிர, மற்ற எல்லாமே தீர்க்கப்படக் கூடியவைதான் என்பதை ஆண்கள் உணர வேண்டும். அதிக உடற்பயிற்சி, உடற்பருமன் போன்றவற்றை குறைக்க வேண்டும். சிகரெட், மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிப்பது மற்றும் மனதை டென்ஷன் இல்லாமல் வைத்துக் கொள்வது போன்றவை முக்கியமானவை. வீரியமான மருந்துகள் உட்கொள்வதாக இருந்தால், மருத்துவர்கள் ஒரு சில ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில பணியிடங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த குறைபாடு அதிகம் ஏற்படுகிறது என்பதால், அவர்கள் வேலையை மாற்றிக் கொள்வது அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்வது நல்லது. இந்த குறைபாடுகளை வெளியே சொல்ல கூச்சப்பட்டு, தகுதியில்லாத மருத்துவர்களை சந்திப்பதும், தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வதும் ஆண்மைக் குறைவினை அதிகப்படுத்திவிடும்.

Previous articleஅவசர யுகத்தில்… அவதியுறும் தாம்பத்யம்!
Next articleகுடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகளும் தீர்வுகளும்