Home இரகசியகேள்வி-பதில் ஒரே வீட்டில் வாழாத கணவன் மனைவியாகவே வாழ்கின்றோம். எனது வாழ்க்கையைச் செம்மையாக்க ஒரு வழி...

ஒரே வீட்டில் வாழாத கணவன் மனைவியாகவே வாழ்கின்றோம். எனது வாழ்க்கையைச் செம்மையாக்க ஒரு வழி தாருங்கள்.

95

கேள்வி: எனக்கு வயது 19. என் காதல னுக்கு 24. நாங்கள் ஒரு வருடமாகக் காதலிக்கிறோம். அவர் எமது காதல் விவகாரத்தை அவரது வீட்டில் கூறி விட்டார். அவர்கள் சம்மதித்தும் விட்டனர். நான் இன்னும் வீட்டில் சொல்ல
வில்லை. என் காதலனுக்கு, நான் படித்து ஆசிரியையாக வரவேண் டும் என்று ஆசை. அவருக்கு அனேக வேலைப்பளு இருப்பதால், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேசுவார். அப்போதும், ‘நீ நன்றாகப் படிக்க வேண் டும்.

அதற்காகத்தான் நான் அடிக்கடி உன்னுடன் கதைப்பதில்லை’ என்று சொல்
கிறார். ஆனால், இது எனக்கு மன உளைச் சலைக் கொடுக்கிறது. அவர் என்னை ஏமாற்றப் பார்க்கிறாரோ, வேறு யாருடனேனும் தொடர்பு இருக்குமோ, அதனால்தான் என்னை தவிர்க்க முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. என் மனம் ஆற ஒரு ஆலோசனை தருவீர்களா?

பதில்: ஆண்- பெண் இருபாலரிடம் இத்தகைய குணாதிசயம் காணப்படும் என்றாலும், அனேக பெண்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

தன்னைக் காதலிப்பவன் தன்னை ஆராதிக்க வேண்டும், கொண் டாட வேண்டும், தன்னை ஒரு இளவரசியாகப் பார்க்க வேண்டும், தனக்கு வேண்டிய, தனக்குப் பிடித்த அனைத்தையும் அவன் செய்துதர வேண்டும் என்று பல பெண்களும் நினைக்கிறார்கள். திரைப்படங்கள் கூட இத்தகைய ஒரு உணர்வுத் தூண்டலுக்குக் காரணமாக அமைகின்றன.

ஆனால், நடைமுறையில், காதலை வேண் டும் பருவங்களில் பெரும்பாலான ஆண்கள் இவ்வாறான, பெண்கள் மனதைக் கவரும் நடவ டிக்கைகளில் ஈடுபட்டாலும், அந்தக் காதல் கைகூடியதும் அவர்களுள் ஒரு மாற்றம் வந்து விடுகிறது.

சிலர் குறிப்பிட்ட பெண் மீது தோன்றும் மோகத்தைத் தீர்த்துக்கொண்டதும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இன் னும் சிலர், தான் எதிர்பார்த்த காதல் கைகூடியதுமே, அந்தக் காதலைத் திருமணம் வரையும் திருமணத்துக்குப் பின்னரான வாழ்க்கை வரையும் இனிமையாகக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிடுகிறார்கள்.

இதனால், காதல் கைகூடியதும் அவர்களிடம் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

ஏறக்குறைய உங்களது விடயத்தில் நடந்திருப்பதும் அது
தான்.

ஏனெனில், அவர் உங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளாததற்குக் காரணம் அவரது அதீத வேலைப் பளு என்பது உங்களுக்கே தெரிந்திருக்கிறது.

மேலும், அவர் உங்களை ஒரு ஆசிரியையாக ஆக்கிப் பார்க்க விரும்புகிறார். இதன் மூலம், திருமணத்தின் பின், உங்களுக்கு ஒரு பொருளாதார உறுதித் தன்மையை ஏற் படுத்தித் தர விரும்புகிறார்.

அதேவேளையில், உங்கள் இருவரது திருமண வாழ்க்கையில் பொருளாதாரம் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார்.

மேலும், பெண்களுக்குப் பெரிதும் உகந்ததான தொழிலான ஆசிரிய சேவையை அவர் உங்களுக்காகத் தெரிவு செய்திருப்பதன் மூலம், உங்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பு மிக்க, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வசதி யானதுமான ஒரு வேலையையும் அவர் தெரிவு செய்தி ருக்கிறார்.

இதன் மூலம், உங்களது நன்மை கருதியே அவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக் கிறார் எனத் தெரிகிறது.

எல்லா வற்றுக்கும் மேலாக, உங்களது காதலரது வீட்டில் உங்கள் திருமணத்துக் குப் பச்சைக்கொடி காட்டியும் விட்டனர்.

எனவே, அவர் உங்களை மறுதலிக்க வாய்ப்பு கள் மிக மிகக் குறைவு.

எனவே, தேவையற்ற சந்தேகங்களைக் களைந்துவிட்டு, சிறந்ததொரு வாழ்க்கைத் துணை உங்களுக்குக் கிடைத்தி ருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக உங்கள் கல்விப் பயணத் தைத் தொடருங்கள்.
——————————————————–
கேள்வி: நான் ஒரு பெண். வயது 17. என்னை ஒருவர் விரும்புவதாகச் சொன்னார். அவருக்கு 23 வயது. இருவரும் வெவ்வேறு சமயங்கள். திருமணம் செய்யும்போது என்னுடைய சமயத்துக்கு மாற மாட்டேன் என்றார். பிறகு எனக்காக ஒத்துக் கொண்டார். ஆனால் என் வீட்டில் சம்மதிக்காவிட்டால் அவருடன் வந்துவிடவேண்டும் என்றார்.

அதற்கு நான் மறுத்தேன். இப்படியே எமது காதல் தொடர்ந்தது. ஒருநாள் அவரை அலைபேசியில் அழைத்தபோது ஒரு பெண் குரல் கேட்டது. அது அவரது அண்ணி என்று கூறினார். ஆனால் அவரது அண்ணனுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. அவர் இப்போது வெளிநாடு செல்லப் போகிறாராம். இந்தக் காதல் கைகூடுமா?

பதில்: உங்களது கடிதத்தை முழுமையாகப் பிரசுரிக்க முடியாது, நீளம் கருதி. எனவே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விடயங்களை வைத்தும் பார்க்கும்போது, நிச்சயமாக அவருடனான உங்களது உறவு உங்களுக்கு மகிழ்ச்சி தராது என்றே சொல்லவேண்டும்.

நீங்கள் உங்கள் காதலில் உண்மையாக இருக்கலாம். உங்கள் வாழ்வில் இன்னொருவருக்கு இடமில்லை என்று சொல்லலாம்.

இது, இந்த வயதில் இருக்கும் எல்லோரும் சொல்வதே.

எது நடந்தாலும் வாழ்க்கை அதன் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும். அப்போது உங்களுக்குப் பொருத்தமான ஒருவரை நிச்சயமாகக் கண்டடைவீர்கள்.

அது காதலாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திரு மணம் என்றாலும் சரி.

உங்கள் காதலர் சார்ந்திருக்கும் சமூகத்தில், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் சற்றுத் தளர்வானவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அப்படியிருக்க, அவர் உங்களை மட்டும்தான் விரும்புவார் என்றும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார் என்றும் உறுதியாகக் கூற முடியாது.

மேலும் உங்களுக்கு திருமணத்துக்கு முன்னரே அவர் மீது சந்தே கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர் உண்மையில் உத்த மராக இருந்தாலும் உங்கள் மனம் அவரைச் சந்தேகிக்கவே செய்யும்.

இவை எல்லாவற்றையும் விட, உங்கள் வாழ்க்கைத் துணையை நிர்ணயிக்கும் வயது இன்னமும் உங்களுக்கு வரவில்லை.

உங்களது சமூகத்தினர் நிச்சயமாக காதல் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதுவும் வேறு சமயத்தவரை என்பதை நீங்கள் நன்றாக அறி வீர்கள். அப்படியிருக்க, இதுபோன்ற காதல் உறவுகள் உங்கள் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் மகிழ்ச்சி தரப் போவதில்லை.

கல்வியில் கவனம் செலுத்துங்கள். இன்னும் நான் கைந்து வருடங்களுக்கு காதல் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு, உங்கள் தோழிகளுடன் சுதந்திரமாக நேரத்தைச் செலவிடுங்கள்.

அதை விட்டுவிட்டு காதல் என்ற பெயரில் உங்களுக்கு நீங்களே விலங்கிட்டுக்கொள்ளாதீர்கள்.

——————————————
கேள்வி: நான் ஒரு பெண். ஒருவரை நீண்டகாலமாகக் காதலிக்கின்றேன். இதைப் பலரும் அறிவார்கள். கிட்டதட்ட ஒரே வீட்டில் வாழாத கணவன் மனைவியாகவே வாழ்கின்றோம். கல்வி நிமித்தமாக 6 மாதங்கள் வெளியூர் செல்ல நேர்ந்தது. வந்து பார்த்தால் அவர் நண்பர்கள், சிகரட், சாராயம் என்று ஆளே மாறிவிட்டார்.

தனிமையில் சந்திக்கும்போது மட்டுமே அன்பாக இருக்கிறார். மற்றபடி தொலைபேசியில் பேசவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ அவருக்கு விருப்பமில்லை. கேட்டால் காசை மிச்சப்படுத்தலாம் என்கிறார். நான் எங்காவது தனியே சென்றால், எனது பாதுகாப்பு குறித்து ஒரு தடவையேனும் தொலைபேசியில் விசாரிக்கமாட்டார். எனக்கு நண்பர்கள் இல்லை. வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையைச் செம்மையாக்க ஒரு வழி தாருங்கள்.

பதில்: நீண்ட காலமாக நீங்கள் காதலிக்கும் நிலையில் உங்கள் காதல் பற்றிப் பலரும் அறிந்திருக்கும் நிலையில், இன்னும் ஏன் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையாமல் இருக்கிறீர்கள்?

இருவரது வீட்டிலும் சொல்லித் திருமணம் செய்துகொண்டால், ஆரம்பத்தில் அவர் விரும்பாவிட்டாலும்,குடும்பம், மனைவி, குழந்தை என்ற ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு வாய்ப்பு உண்டு அல்லவா?

ஆணோ, பெண்ணோ தனியே இருக்கும்வரை அவர்களது நற்பண்புகள் பற்றி உறுதி கூற முடியாது. அதே வேளை, திருமணம் முடித்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் அவர்களை அறியாமலேயே அந்த உறவு அவர்களை ஈர்த்துக் கொள்ளும்.

மேலும் நீண்ட காலம் காதலர்களாகவே இருப்பது ஒரு சலிப்பைத் தர வாய்ப்பிருக்கிறது.

எனவே தாமதிக்காமல் அவரைத் திருமணம் செய்துகொள்ள முயற்சியுங்கள்.