Home உறவு-காதல் உங்கள் காதல் உறவு கசந்து போக வாய்ப்பே இல்ல டிப்ஸ்

உங்கள் காதல் உறவு கசந்து போக வாய்ப்பே இல்ல டிப்ஸ்

389

காதல் உறவுகள்:நான் பாட நினைப்பதெல்லாம் நீ பாட வேண்டும்’ என்ற பாடல்வரியை இன்றைய கால காதல்கள் காலாவதியாக்கிவிட்டன. உறவில் ஆண் நினைப்பதையே பெண்ணின் மனம் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. இன்றைய கால இளைஞர்கள் தங்களின் தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை. மனது ஒத்த தம்பதிகளும் அவரவர்கான ஸ்பேஸை இழக்காமல் இருக்கும் பொழுது உறவில் கூடுதல் பிணைப்புடன் இருக்க முடியும். உங்களுக்கான நேரத்தை நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக செலவிடுவதும் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் செயல்படுவதும் உங்களின் உலகை பரந்து விரியச் செய்யும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கம் உறவின் அடிப்படை உரிமை. காதல் உறவில் பிரைவஸியை ஏன் முக்கியம் என்பதை பார்க்கலாமா…

பிரைவஸி போற்றும் காதல்

இன்றைய இளைஞர்கள் காதலுக்குகாக தன் உலகத்தையே மாற்றியமைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தன் உலகத்துடன் இணைந்து வர முடிகிறவர்களையே வாழ்கைத்துணையாக தேர்ந்தெடுக்கின்றனர். காதலுக்காக தன் அடையாளத்தையோ தன் விருப்பங்களையோ மாற்றிக் கொள்ளவதில்லை. ஆணோ பெண்ணோ தன் காதல் துணையிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்கள் பல உண்டு. காதலன்/ காதலி என்ற உரிமையின் அடிப்படையில் அத்துமீறி அவற்றை தெரிந்து கொள்ள முயல்வது சரியானதல்ல.

நட்பின்றி அமையாது காதல்

பிரைவஸியின் மற்றொரு வடிவம் அவரவர் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது. உங்களின் காதல் துணை நண்பர்களுடன் இருக்கும் பொழுது தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பில் சாட் செய்யச் சொல்லியும், ஒவ்வொரு நிமிடமும் இருக்கும் இடத்தை அப்டேட் செய்ய வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள். நண்பர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் நண்பர்களுக்கானதே என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் ரகசியம் என்று கூறியதை ரகசியமாகவே வைத்திருந்து நட்பு வட்டத்தின் நம்பிக்கையைப் பெறுங்கள்.

இணையத்திலும் தேவை அந்தரங்கம்

உங்கள் லவ்வரிடம் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வளைதளங்களின் பாஸ்வேர்டை கேட்காதீர்கள். ஃபேஸ்புக் நண்பர்கள் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசியதை பொது வெளியிலோ அல்லது உங்களின் காதலரிடமோ பகிர வேண்டிய அவசியமில்லை. உறவில் பிறரின் அந்தரங்கத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

காதலும் கசந்துபோகும்

நாளின் எல்லா நேரமும் ஒருவர் முகத்தை மட்டுமே பார்த்தபடி இருப்பது காதலர்களுக்கும் நல்லதல்ல, காதலுக்கும் நல்லதல்ல. நாளின் நேரத்தை சரியாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். வேலைக்கான நேரம், காதலுக்கான நேரம், நட்புக்கான நேரம், உங்களுக்கான நேரம் என்று பிரித்து திட்டமிட்டு செயல்படுங்கள்.

காதல் என்றதும் முற்றும் முழுதாக தங்களின் உலகத்தையே மாற்றியமைத்து வாழ வேண்டிய அவசியமில்லை. காதலில் கூடுதல் பிணைப்புடன் வாழ அவரவர் பிரைவஸியை மதிக்கப் பழகுங்கள்.