Home உறவு-காதல் காதல் என்றால் என்ன தெரியுமா? இதுதான் மேட்டர்

காதல் என்றால் என்ன தெரியுமா? இதுதான் மேட்டர்

147

காதல் உறவு:துள்ளிதெறிக்கும் வயதாம் பதினாறு வயது.. HORMONEகளின் அட்டகாசம் எட்டிபார்கும் காலம். கல்வி எனும் ஒரு விடயம் ஒரு மனிதனின் வாழ்கையையே திசைமாற்றும் பருவம். சவால்களும் இலட்சியஙளும் நிறைந்த ஒரு போர்காலம்.. இவை யாவற்றின் மத்தியிலும் காதல் எனும் மெல்லிய உணர்வு ஒரு மனிதனுடைய மனதுள் பூக்கும் பருவமும் இதுவே என்பதிலும் எனக்கோ ஐயமில்லை..இதையெ “உனக்கும் எனக்கும்” என்ற ஜெயம் ரவி நடித்த படத்தின் ஒரு பாட்டின் வரிகளில் “16 தொடங்கி 60 வரைக்கும் SOMETHING இன்றி யாரடா ?” என்று கூறுகிறது.

ஆம்.. இதுவெ இயற்கை.. யார் மறுத்தாலும் யார் மறைத்தாலும் இதுவே உண்மை.. ஆனால் இவ்வுணர்வு ஒவ்வொருவரை வெவ்வேறு விதமாய் வெவ்வேரு ஆழத்தில் பாதிக்கிறது என்பதிலேயெ மாறுபடுகின்றது.

சிலருக்கு அவர்களுடைய பெற்றொரின் கட்டுப்பாடுகள், ஒழுக்கம் எனும் வட்டத்துள் அவர்களுடைய பெற்றோரும் அவரவர் வளர்ந்த சூழலும் வரையறுத்துள்ள விடயஙள் , கல்வி எனும் விடயத்திற்கு செலுத்தும் பிரதாணத்தினால் கல்வி கெட்டு விடமோ என்ற பயம் , நான் இருக்கும் குடும்ப நிலையில் காதல் ஒன்று தான் குறைச்சல் என்ற எண்ணங்கள் , காதலா ?? சீ சீ அபச்சாரம் அபச்சாரம் !! என்ற எண்ணம் எனப்பல காரணங்களினாலும் சூழ்நிலைகளினாலும் இக்காதல் என்பது வெறும் மாயையே இருபது இருபத்தினாங்கு வயதிற்கு பின் வந்தால் மாத்திரமே அது காதல் என தாங்களே நினைத்து தங்களது உணர்வுகளை புதைத்து விடுவோர் பல.(இதைத்தவறு என நான் கூறவில்லை இவை வெறும் விமர்சனஙளே)

இவ்வாறானோர் வாழும் அதே உலகில் அதே சமூகத்தில் இக்காதல் ஒரு மின்னலை ஒத்த ஈட்டிபோல் ஊடுருவிப்பாய்ந்து உள்ளேயே சிக்கி நிரந்தரமாகவே இடம் பிடித்துள்ள நெஞ்சங்களும்பல.. இவர்களுள் இன்னும் சிலர்க்கு இக்காதல் நாடி நரம்புகளினூடே சென்று செந்நீரில் கலந்து காதலே தங்களது உயிர்நாடி உயிர் மூச்சு என வாழ்வோரும் உளர்.

இவ்வகைப்பட்டோரின் வளர்ப்புச்சூழல் சரியில்லை என்றோ பெற்றோரின் கண்காணிப்பு போதாது என்றோ இவர்களின் ஒழுக்கமில்லாமை என்றோ இவர்களுக்கு கல்விமேல் ஆழமான ஈடுபாடு இல்லை என்றோ கூறுவது என்ன நினைப்பதே தவறாகும். பதினாறு வயதிலும் இவ்வகைப்பட்ட வரம்புகளை மீறியும் அவரவர் நெஞ்சங்களில் நுழைந்த காதலின் ஆழம் அல்லது பாதிப்பு என்பதே இதற்கு காரணம் எனக்கூற இயலும்.. இவ்வகைப்பட்ட ஒரு பாதிப்பு ஏற்படுவத்ற்கும் பல காரணங்களை முன்வைக்கலாம்..
இன்றைய இளம்பராயத்தினரின் முக்கியமாக பதினாறு வயதோரின் வாழ்கயில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து இப்போது அவர்களுடைய வாழ்வையே அதாவது வாழ்கை முறையயே சிறிது மாற்றக்கூடிய அளவிற்கு அங்கீகாரம் பிடித்துள்ளது தமிழ் சினிமா.

இது வெறும் பொழுதுபோக்காக அன்றி அவரவர் வாழ்கையில் வெவ்வேறு கோணங்களில் பின்னிபிணைந்துள்ளது இத்தமிழ் சினிமா. அதாவது திரைப்பட நாயகர்கள் பேசும் விதம் (விஜயின்style) நடக்கும் விதம் (ரஜினியின் style) தங்களுடய உடல் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை (சூர்யவின் six packs), சண்டைக்கலைகள் அதேவாறு பெண்களுக்கு நாயகிகள் உடுக்கும் விதம் அதே ஆடையை வாங்க வேண்டும் என்ற ஒரு நப்பாசை என்று பல கோணங்களில் பாதிக்கும்

அதே வேளை ஆண் பெண் இரு பாலினருக்கும் பொதுவாக இத்தமிழ் சினிமா காதல் என்ற உணர்வு ஏற்பட தூன்டுகிறது என்பதையும் ஏற்பட்டோரின் மனதுகளில் மென்மேலும் வளர்க்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாத ஒரு நிஜம் ஆகும்.

இதற்கு உதாரணமாக “விண்ணைத்தாண்டி வருவாயா” , “வாரணம் ஆயிரம்” என்ற படங்களை முன்வைக்கலாம்.. இவ்வாறான தமிழ்ப்படங்களின் பாதிப்பு வெறும் இருபது வயதினை தாண்டியோர்க்கு மட்டுமே ஒழிய பதினாறு வயதோற்கு ஏற்படுத்தாதா ?? பதினாறு வயதினர்க்கு உணர்ச்சிகள் இல்லையா ?? என்பது கேள்வியே ! மேற்கூறிய திரைப்படஙள் என்பது இக்காதலின் உதயத்திற்கும் வளர்ச்சிக்கும் பல காரணங்களில் ஒரு காரணம் மாத்திரமே

Previous articleஉங்களுக்கு சிக்ஸ்பேக் உடல் அமைப்பை பெற உதவும் பயிற்சி
Next articleபெண்களுக்கு வரும் சீரற்ற மாதவிலக்கு பிரச்சனைகள்