Home பாலியல் நீங்கள் கொடுக்கும் உதட்டு முத்தம் உங்களுக்கு தரும் நோய்கள்

நீங்கள் கொடுக்கும் உதட்டு முத்தம் உங்களுக்கு தரும் நோய்கள்

182

பாலியல் நோய்கள்:நமக்கு பிடித்தமான நபரை முத்தம் கொடுக்கும் போது, அதனால் நோய்கள் பரவும் என்று நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக நாம் அளிக்கும் முத்தம், உடல்நலம் சார்ந்த ஒன்றாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இனி முத்தம் கொடுக்கும் மருத்துவம் சார்ந்த சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. கீழ்க்கண்ட சுகாதார நிலைகள், முத்தம் கொடுப்பதால் சுகாதாரமற்ற நிலைகளாக மாறும் சூழல்கள் ஏற்படக்கூடும்.

1 – இன்புளூயன்சா (Influenza)

எச்சில் மூலம் பரவக்கூடிய நோயாகும். பாதிக்கப்பட்ட நபரை முத்தம் கொடுப்பதன் மூலம் பிறருக்கு எளிதில் பரவும். மேலும் தும்மல், இருமல் ஆகியவற்றின் மூலமும் தொற்றக்கூடியது. அதனால் சதைகளில் வலி, தலை வலி, தொண்டைப் புண், காய்ச்சல் ஆகியவை ஏற்படக் கூடும்.

2 – தோல் அலர்ஜி (Herpes)

முத்தம் கொடுப்பதன் மூலம் பரவக்கூடியது. அதன்மூலம் வாய்ப்பகுதியைச் சுற்றிலும் அலர்ஜி ஏற்பட்டு, புண்கள் தோன்றும்.

3 – சிபிலிஸ் (Syphilis)

உடல் ரீதியான தொடர்பின் மூலம் பரவக்கூடியது. குறிப்பாக முத்தம் கொடுப்பது, உடலுறவு கொள்வது ஆகியவற்றால் ஏற்படும். அதன்மூலம் வாய்களில் புண்கள் ஏற்படும். அதனை ஆண்டிபயாடிக்ஸ் மூலம் எளிதில் கட்டுப்படுத்த இயலும்.

4 – மெனின்கிடிஸ் (Meningitis)

முத்தம் கொடுப்பதன் மூலம் பரவும் பாக்டீரிய தொற்று. அதனால் கழுத்து வலி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

5 – சுவாசக் கோளாறுகள் (Respiratory viruses)

சளி, காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்டவை ஏற்படக் கூடும். நம்முடைய ஆடைகளை பகிர்வதன் மூலமும், ஒரே அறையில் வசிப்பதன் மூலமும் பரவக்கூடும். இருப்பினும் முத்தம் கொடுப்பதால், இந்த வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

6 – ஈறுப் பிரச்னைகள் (Gum Diseases)

இயல்பாக முத்தம் கொடுப்பதன் மூலம் ஈறுப் பிரச்னைகள் பரவுவது இல்லை. ஆனால் சில மோசமான பாக்டீரியாக்கள் அதனை உண்டாக்கி விடுகின்றன. நன்கு வாய்க் கொப்பளிப்பது, பல் துலக்குவது மட்டுமே சிறந்த தீர்வுகளாகும்.

7 – பற்சிதைவு (Tooth Decay)

ஸ்ரெப்டோகோகஸ் மூட்டன் பாக்டீரியா மூலம் பரவக்கூடியது. முத்தம் கொடுப்பதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், பற்சிதைவு ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு.