Home ஆரோக்கியம் என்ன செய்தால் குறட்டை வராது?

என்ன செய்தால் குறட்டை வராது?

137

குறட்டை என்பது ஒரு தீர்க்க முடியாத பிரச்னையாகவே உருவெடுத்து வருகிறது. குறட்டையால் விவாகரத்து வாங்கும் நிலை கூட இன்றைக்கு உருவாகிவிட்டது. குறட்டை உண்டாக பல காரணங்கள் உண்டு. ஆனால் குறட்டை வராமல் இருக்க என்ன தான் செய்வது என்பது தான் பலருடைய கேள்வியும்.

ஏனென்றால் இதை மருந்து, மாத்திரைகளால் எல்லாம் சரி செய்ய முடியாது. அப்போ என்ன தான் செய்யலாம்? இதுபோன்று மருந்துகளால தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கு யோகாசனம் தான் நல்ல தீர்வைத் தரும். அதேபோல் தான் குறட்டைக்கும் யோகாவில் தீர்வுகள் உண்டு.

குறட்டை என்பது மூச்சு பிரச்னையால் உண்டாவது. சிலருக்கு தூங்கும்போது மூச்சுவிடுவது கடினமாக இருக்கும். ஆக்சிஜன் பற்றாக்குறையே இந்த குறட்டைக்கு முக்கியக் காரணம்.

சிம்மாசனம்

சிம்மாசனம் சுவாச மண்டலத்தின் இயக்கத்தைச் சீராக்கும். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதனால் சுவாசம் தடைபடாமல், எந்த சிரமமும் இல்லாமல் இருக்கும். அதனால் சிம்மாசனம் செய்வதால் குறட்டை உண்டாவதை தடுக்க முடியும்.

மட்ஸ்யாசனம்

மட்ஸ்யாசனம் செய்வதால் முதுகு, கழுத்து, தண்டுவடப் பகுதியில் உள்ள தசைளயை உறுதிப்படுத்தும். இது சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியது. அதனால் குறட்டையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தினமும் படுக்கச் செல்வதற்கு முன்பாக பத்து முறை செய்துவிட்டு படுக்கைக்குப் போகலாம்.

பிராணயாமம்

பிராணயாமங்களில் பல வகையுண்டு. உஜ்ஜயி பிராணயாமம், ப்ரமாரி பிராணயாமம் ஆகியவை அதன் உட்பிரிவுகளாகும். பிராணயாமத்தை தினமும் செய்து வருவதால் மூச்சுக்குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கி, நுரையீரலின் ஆரோக்கியம்
காக்கிறது. மேலும் இது கழுத்தில் உள்ள தசைகளை வலிமைப்படுத்தி மூச்சுக்குழாய்களைச் சுத்தம் செய்யும்.

இந்த யோகாசன முறைகளை தினமும் செய்துவந்தாலே மூச்சு பிரச்னைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், குறட்டை பிரச்னை ஆகியவற்றைத் தீர்க்க முடியும்.