Home குழந்தை நலம் குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்?

குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்?

38

பருமழை சரியாக பெய்யாமல் காலை நேரத்தில் அதிக வெயிலும் இரவில் பனியும் கொட்டுகிறது. இதனால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் வைரஸ்தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் தாளம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி நோய் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர்.

இது உமிழ் நீர் சுரப்பிகளில் வீக்கத்துடன் உண்டாகும் தீவிரமான தொற்று நோய் உலகின் எல்லா நாடுகளிலும் தாளம்மை நோய் ஏற்படுகிறது. சில பாகங்களில் தாளம்மை நிரந்தர தொற்று நோயாகவும் உள்ளது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு வருவது என்றாலும் முதியவர்களுக்கு அறவே வராது என்று கூற முடியாது. பெரும்பாலும் இது இளவேனிற் காலங்களில்தான் பரவுகிறது என்றாலும் மற்ற பருவங்களிலும் இந்த நோய் தொன்றுகிறது..
நோய் தாக்குதலுக்கு காரணம்

பாரா இன்ஃப்ளுயன்ஸா ஒன்று மற்றும் இரண்டு என்ற எண்ணுள்ள வைரஸ் தொற்றிக் கொள்வதால் இந்த நோய் உருவாகிறது. இந்த வைரஸ் சுரப்பிக் கோளங்களையும், நரம்புத் திசுக்களையும் தாக்கும் திறனுடையது.
இந்த நோய் கிருமிகள் நோயுள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வாய், மூக்கு, வழியாக காற்றின் மூலம் பரவுகிறது. நோயுள்ளவர்கள் இருமினாலும் தும்மினாலும் வெளிப்படும் காற்றுத் திவலைகள் மூலம் இந்த நோய்க் கிருமிகள் அடுத்தவரைத் தொற்றிக் கொள்கின்றன. நோய் தொற்றியவுடன் ரத்தத்தில் வைரஸ் கிருமிகள் அதிகரிக்கிறது. இதனால் காய்ச்சல் உண்டகிறது. இவ்வைரஸ்கள் வாய்ப் புறச் சுரப்பி கோளங்களையும், நரம்பணுத் திசுக்களையும் தாக்கி தொற்றிக்கொள்கிறது.
என்ன அறிகுறிகள்?

தாடை வீக்கம் தான் இந்நோயின் முதல் அறிகுறியாகும். பெரும்பாலும் தாளம்மை நோயில் தாடையில் உள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கமடையும். அதனால் அங்கு உள்ள தோல் பளபளப்பாகத் தோன்றும். மனித உடலில் நோய் தொற்றிய பிறகு நோய் முதிர்காலமாக 18 முதல் 20 நாள் ஆகும்.
தாளம்மை வீக்கம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும். மீண்டும் ஓரிரு நாளில் அடுத்தப் பக்கத்துக் கன்னத்தில் வீக்கம் தோன்றலாம்.

இந்நோய் தோன்றுவதற்குமுன் லேசான சுரம் மற்றும் நடுக்கம் ஏற்படலாம். காது வலி, முக நரம்பு மற்றும் வாயினை மெல்ல உதவும் தசைகளில் வலி ஏற்படும். இதுபோன்ற நிலை ஏழு அல்லது எட்டு நாட்கள் இருக்கும். உணவைப் பார்த்த உடன் உமிழ் நீர் சுரக்கும். வீங்கி இருக்கும் உமிழ்நீர் சுரப்பி சுரக்கும்போது கன்னத்தில் வலி தோன்றுகிறது. வாயை மெல்ல உதவும் நரம்புகளில் வலி இருக்கும். கழுத்தைச் சுற்றி இருக்கும் நிணநீர் கட்டிகள் வீக்க முற்றிருக்கும்.
மலடாகும் ஆபத்து

இந்த நோய் ஆண் குழந்தைகளை தாக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விதையழற்சி (Orchits) ஏற்படலாம். இதன் காரணமாக வெகு சிலருக்கு விந்தணு உற்பத்தி பிற்காலத்தில் இல்லாமல் போய்விடுகிறது. பெரும்பாலும் ஒரு பக்கத்தில் உள்ள விதையில் மட்டுமே பாதிப்பு ஏற்படும். அரிதாக ஒரு சில ஆண்களுக்கு இரு விதைகளிலும் பாதிப்பு ஏற்பட்டு விந்தணுக்களே உற்பத்தியாகாமல் ஆண் மலடாக ஆகிவிடுகிறார்கள். பெண்களக்கு சினைப்பையழற்சி (ஒரு பக்கத்தில் மட்டும்) ஏற்படலாம்.பெண்களுக்கு கணைய அழற்சியும் ஏற்படலாம்.
தனி கவனம் தேவை

தாளம்மை தாக்கியவர்களை தனி அறையில் தனித்துத் தங்க வைக்க வேண்டும். நீர்ம உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். நோயின் கடுமையைக் குறைக்க “பரோடிடினம்-30” என்ற ஹோமியோபதி மருந்தைத் தர வேண்டும்.தளம்மை தாக்கியவர்களுக்கு பெல்லடோனா, மெர்க்கூரியஸ், பல்சடில்லா போன்ற மருந்துகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தாளம்மை நோய் நீங்கிய பிறகு, இரண்டாம் நிலைத் தொற்றாக (Secondary infection) அக்கி (Erisipelas) குடற்காய்ச்சல், பேதியாதல், கடுமையான உடல் வலி ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்க ருஷ்-டாக்ஸ் மருந்து தருகின்றனர். இவைகளைத் தவிர “பைலோகார்பின்” “கோனியம்” மற்றும் “லெகெசிஸ்” போன்ற மருந்துகளும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வாழ்வில் ஒரு முறை தாளம்மை வந்து விட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் அந்நோய் திரும்ப வர வாய்ப்பில்லை
என்பது ஆறுதலான செய்தியாகும்.