Home சமையல் குறிப்புகள் கேரளா ஸ்பெஷல்: சிக்கன் காந்தாரி பேரலன்

கேரளா ஸ்பெஷல்: சிக்கன் காந்தாரி பேரலன்

36

சிக்கன் காந்தாரி பேரலன் ஒரு கேரளா ரெசிபியாகும். இதை சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும். சிறிய மிளகாயை கேரளாவில் காந்தாரி என சொல்வார்கள். சிறிய மிளகாயை சட்னி, அசைவ உணவிற்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். சிக்கன் காந்தாரி பேரலன் எவ்வாறு செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சதைப்பகுதியான சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2 ( நறுக்கவும்)
கடுகு – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 2 டீஸ்பூன் ( நசுக்கவும்)
இஞ்சி – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
பச்சை மிளகாய்- 3
சிறிய பச்சை மிளகாய் – 6
தனியாதூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால்
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு இட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகுமாறு வதக்க வேணடும். அதனோடு, நசுக்கிய சிறிய பச்சை மிளகாயை போட்டு , குறைவான தீயில், தனியாதூள், சோம்பு தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், சிக்கனைப் போட்டு கறிவேப்பிலை சேர்த்து சிக்கனை நன்றாக வறுக்க வேண்டும்.

சிக்கனை கிளறி விட்டு தேங்காயப்பாலைச் சேர்த்து வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் கரம் மசாலா சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சிக்கன் கந்தாரி பேரலன் ரெடி!