Home பாலியல் வெட்டை பாலியல் நோய் (கொனேரியா) என்றால் என்ன?

வெட்டை பாலியல் நோய் (கொனேரியா) என்றால் என்ன?

40

வெட்டை நோய் (கொனேரியா) என்றால் என்ன?
வெட்டை நோய் என்பது ஒரு பால்வினை நோயாகும். வெட்டை நோய், நிசிரியா கொனேரியே என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் சுலபமாக வளர்ந்து, எண்ணிக்கையில் பெருகுகின்றன. இப்பாக்டீரியாக்கள் வாய், தொண்டை, கண்கள் மற்றும் குதம் போன்ற பகுதிகளிலும் வளரும்.

மக்களுக்கு வெட்டை நோய் (கொனேரியா) எப்படி ஏற்படுகிறது?
கொனேரியா ஆண்குறி, பெண்குறி, வாய் அல்லது குதம் மூலம் பரவுகிறது. கொனேரியா தொற்று கண்ட பெண்ணிடமிருந்து, குழந்தை பிறப்பின் போது இந்நோய் குழந்தைக்கும் பரவுகிறது.

கொனேரியா-வின் அறிகுறிகள் யாவை?
கொனேரியா நோய் தொற்று கொண்ட நபருடன் அதிகளவு பாலுறவு கொள்ளும் எந்த நபருக்கும் கொனேரியா நோய் தொற்று ஏற்படும். பல ஆண்களக்கு, எந்தவித நோய் அடையாளங்களுமின்றி கொனேரியா நோய் இருக்கலாம். அடையாளங்கள் தோன்ற 30 நாட்கள் வரை கூட ஆகும். சலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல் அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஆண்குறியிலிருந்து கசிவு வெளியேறுதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் கொனேரியா நோய் உள்ள ஆண்களில் விரைவீக்கம் அல்லது விரையில் வலி ஏற்படும். பெண்களில் பெரும்பாலும் கொனேரியா நோயின் அடையாளங்கள் மிதமாக இருக்கும். பெண்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி ஏற்படுதல், பெண்குறியிலிருந்து கசிவு அல்லது மாதவிடாய் காலங்களுக்கு இடையில் இரத்தப்போக்கு ஏற்படுதல் போன்றவை ஆரம்ப அடையாளங்கள் ஆகும்.

கொனேரியா எப்படி கர்ப்பிணிப் பெண் மற்றும் அப்பெண்ணின் குழந்தையை பாதிக்கிறது?
ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு கொனேரியா இருந்தால், அப்பெண்ணின் குழந்தை பிறப்பு உறுப்பின் வழியாக பிறக்கும் போது, அக்குழந்தைக்கு இந்நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், குழந்தைகளில் குருட்டுத்தன்மை, மூட்டுகளில் நோய்தொற்று அல்லது உயிர்ககு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இரத்தத்தில் நோய் தொற்றுதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களில், இந்நோய் தொற்றியுள்ளதை கண்டறிந்தவுடன், அதற்கான சிகிச்சை அளிப்பதால் மேற்கூறிய சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தினை குறைக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனை, ஆய்வுகளை செய்து மற்றும் அதற்கான சிகிச்சையைப் பெற வேண்டும்.

கொனேரியா வராமல் எப்படி தடுத்துக் காக்கலாம்?
தகாத பாலுறவுகளுக்கு விலகியிருப்பது பால்வினை நோய் வராமல் தவிர்க்கும் நம்பபத்தகுந்த வழியாகும்