Home பெண்கள் தாய்மை நலம் கருப்பை புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

கருப்பை புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

71

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை குழாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அவற்றைப் பற்றிய போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் பற்றி தெரிந்து வைத்திருக்கும் அளவுக்குக்கூட கருப்பைக் குழாய் புற்றுநோய் பற்றி அறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மார்பகப் புற்றுநோய் பற்றி எவ்வளவு விழிப்புணர்வு வந்தாலும் தாங்களாகவே மாதம் ஒருமுறை செய்து கொள்ளும் சுய பரிசோதனையைக் கூட பெண்கள் செய்து கொள்வதில்லை. இதில் எங்கே கருப்பை குழாய் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வது?…

மூன்றில் ஒரு பெண் கருக்குழாய் சோதனை செய்து கொள்ள பெரும் தயக்கம் காட்டுகிறார்கள். பொதுவெளியில் அவற்றைப் பற்றி பேசவே தயங்குகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உடல்நலக் குறைவால் இறந்துபோகும் பெண்களில் நான்கில் ஒரு பங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பாதி பெண்களுக்கு தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியாமலே இருந்துவிடுகிறார்கள் என்பது தான்.

திடீரென பெண்களின் உடல் வடிவில் மாற்றம், பிறப்புறுப்பில் ஏதேனும் வேறுபாடு, அளவுக்கதிகமாக பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று சாதனை செய்து கொள்வது மிக அவசியம்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது பெண்கள் மார்பகப் புற்றுநோய் சோதனையும் கருப்பை மற்றும் கருப்பைக்குழாய் புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்து, தகுந்த மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.