Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வது எப்படி இருக்கும்?… பெண்கள் என்ன சொல்கிறார்கள்?…

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வது எப்படி இருக்கும்?… பெண்கள் என்ன சொல்கிறார்கள்?…

66

உடலுறவு பற்றி பேச ஆரம்பித்தவுடன் சிலர் முகம் சுளிப்பார்கள். ஏதோ அவர்களுக்கு அது பிடிக்காதது போல. சிலர்க்கு அது உண்மையில் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் உண்மையில் உடலுறவு என்பது புனிதமான ஒன்று. உடலுறவு இல்லை என்றால் இன்று நீங்களும் இல்லை, நானும் இல்லை.
அதற்காக முறை தவறி செல்வது மிகவும் மோசமான ஒன்று. ஒரு பெண்ணும் ஆணும் திருமணம் எனும் பெயரால் ஒன்றாய் இணைந்து, அவர்கள் வாழ்க்கையில் இரு உடல் ஓர் உயிராய் வாழ்ந்து, ஒரு உயிரை அவர்கள் வாழ்வில் அன்பின் சான்றாய் இந்த பூமிக்கு கொண்டு வரும் புனிதமான ஒன்றே உடலுறவு.
அதை கொச்சைப்படுத்துவதும், கலங்கப்படுத்துவதும் சில அறிவிலிகள் செய்யும் செயல்களாகும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்போ நாம் பார்க்கப்போவது, பெண்களின் கருத்தரிப்பிற்கு பின் உடலுறவு எப்படி இருக்கும். இதற்கான பதில் நமக்கு 7 தம்பதிகள் அவங்க அனுபவம் மூலமாக கொடுத்திருக்காங்க.

1. உடலுறவு என்பது கடைசியான ஒன்றாக இருக்கலாம், அதை பற்றி நீங்கள் நினைப்பது?
13 மணிநேர கடுமையான வேலைகளுக்கு பிறகு உடலுறவு என்பது என் மனதில் கடைசியாய் பதிந்திருக்கும் ஒன்றுதான். வேலை நேரத்தின் சோர்வை மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது. எனது மருத்துவரை சந்தித்த பிறகு தான் எனக்கு பரபரப்பு அதிகமானது. ஏனென்றால் மருத்துவர் எங்களை சில வாரங்களுக்கு தவிர்க்க சொன்னதுதான். ஆனால் என் கணவர் அந்த பரபரபனுடன் அமைதியாய் இருக்கமாட்டார். மருத்துவரின் நல்ல வார்த்தைகளை சிறு மனிப்போடு ஏற்றுக்கொண்டோம். இது தானியாவின் அனுபவம்.

2 கருத்தரிப்பின் போது நாங்கள் உடலுறவு கொண்டது
கருத்தரிப்பின் போது நாங்கள் ஒரு முறை மட்டுமே உடலுறவு கொண்டோம். மிக கவனத்துடனும், புரிதலுடனும். அதன் பின் நாங்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்த போதெல்லாம், எங்களுக்கு அந்த முதல் முறை கொண்ட உடலுறவையே நினைவுபடுத்தியது என்று கரண் சிரித்தார். அதனுடைய வலி மிகவும் அதிகமாக இருந்ததால், நாங்கள் மீண்டும் முயற்சிக்கவில்லை என்று நேஹா கூறி முடித்தார்.

3 அவசரம் இல்லாமல் எளிதாக பண்ணலாம்
நாங்கள் இது போன்ற விவகாரமானவற்றை செய்வதற்கு அதை பற்றி முதலில் பேச துவங்கினோம் என்று மீனா புன்னகைத்தார். அது மிகவும் எங்களுடைய முன்விளையாட்டிற்கு உதவியது மற்றும் அவளுடன் உடலுறவு கொள்வதை எளிமையாக்கியது, மற்றும் அது எங்களை உற்சாகப்படுத்தியது என்று ஒப்புக்கொண்டார் ராகுல்.

4 உங்கள் மார்பகங்களை மிகவும் மிருதுவானதாக மாற்ற தயாராகுங்கள்
என் கணவர் எனக்கு முத்தங்கள் கொடுக்க என்னை திருப்ப முயன்றார். அப்போது என் மார்பகங்களை தழுவ, நான் அவர் கைகளை மிக வேகத்துடன் தட்டி விட்டேன். அப்போது எனக்கு காயமும், மிகுந்த வலியும் ஏற்பட்டது என்று அணு கூறினார். பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களது உடலுறவில் அது பல வழிகளில் தவிர்க்கப்படுகிறது. அதிகப்படியான பெண்கள் தங்கள் மார்பகங்கள் உடலுறவில் தூண்டப்படுறத விரும்புவதில்லை.

5 நம்மிடமிருந்து குழந்தையால் என்ன கேட்க முடியும்
நான் குழந்தை நாம் பேசுவதை கேட்டும் என்று தெரிந்த போது மிகவும் ஆச்சர்யமடைந்தேன் மற்றும் முற்றிலுமாக அதில் திசை திருப்பப்பட்டேன் என்று பலமாக சிரித்தார் அவந்திகா. நான் மிகவும் கவலையடைந்தேன், என் குழந்தை கேட்டருக்குமோ அல்லது நாங்கள் சாட்சியுடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டோமோ என்று.

6 உங்கள் மென்மையான உடல் பகுதியில் உணர்திறன் குறையும்
எனக்கு உணர்ச்சிகள் குறைய ஆரம்பித்தது. நானே ஆச்சர்யப்பட்டேன், என் கணவர் கடைசி சில வாரங்கள் என்னை உடலுறவுக்கு நச்சரிப்பதை சரி செய்து கொண்டார் என்று அதிதி ஆச்சரியப்பட்டார். குழந்தை பிறப்புக்கு அப்புறம் சில பெண்களோட பிறப்புறுல சில மாற்றங்கள் ஏற்படும், அதனால் உணர்ச்சிகள் குறைய ஆரம்பிக்கும். அதை சரி செய்ய பிரசவத்துக்கு பின் சில உடல் பயிற்சிகள் மேற்கொண்டு சரி செய்து கொள்ள முடியும்.
7 அறுவை சிகிச்சை முறை உங்கள் உடலுறவை பாதிக்கும்
சுகப்பிரசவமாய் குழந்தை பெற்றவர்களுக்கு மட்டுமே உடலுறவின் போது வலி அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மிக உணர்வுகள் நிறைந்த பகுதி அது, எனவே உடலுறவின் போது மிகுந்த வலி ஏற்படும். வலிகள் குறைத்தபின் உடலுறவு கொண்டாள் உங்களால் திருப்தி அடைய முடியும் என்று சஞ்சனா கூறி முடித்தார். சுகப்பிரசவம் என்றாலும் சரி, அறுவை சிகிச்சை என்றும் சரி உங்கள் உடலுக்கு ஓய்வு தேவை.
உங்களின் கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைப்பதை பின்பற்றுவது மிகவும் நல்லது. உங்கள் குழந்தை நீங்கள் செய்து கொண்டிருப்பதை கவனிக்கிறது என்று உணருங்கள். அந்த சமயம் தேவையற்றதை தவிர்த்து, உங்கள் குழந்தையுடன் உரையாட துவங்குங்கள். கர்ப்ப காலத்தில் இது போன்ற செயல்கள் மோசமான அனுபவத்தை கூட ஏற்படுத்தலாம். மிகுந்த கவனத்துடன் உங்கள் குழந்தையை கையில் ஏந்தும் நாளை எதிர்பாருங்கள்.