Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை எவ்வளவு அதிகரிக்கலாம்

கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை எவ்வளவு அதிகரிக்கலாம்

38

பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான எடையில் இருக்க மாட்டார்கள்.. கர்ப்ப காலத்தில் உடல் எடையானது உங்களது உயரம், எடை, வயது ஆகியவற்றை பொருத்து எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று உங்களது மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார்.

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14 வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார், 12 கிலோ முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். எனவே இதற்காக பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்..

உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில், 13 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக இவர்கள் சிரமம் பார்க்காமல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல், 7 கிலோ முதல் 11 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

முதன் முதலில் கர்பமடைந்த பெண்கள் தங்களது உடல் எடையை முதல் மூன்று மாதங்களில் 1 கிலோ முதல் 2 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரங்களிலும் அரை கிலோ கிராம் வரையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது அவசியமாகும்.

உங்களுக்கு இரட்டை குழந்தை என்றால், நீங்கள் 16 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரையில் தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.