Home சூடான செய்திகள் கற்பழிக்கப்பட்ட பின், ஓர் அபலைப் பெண் வாழ்வில் நடந்த கோரமான நிகழ்வுகள் – அவளது பார்வையில்!

கற்பழிக்கப்பட்ட பின், ஓர் அபலைப் பெண் வாழ்வில் நடந்த கோரமான நிகழ்வுகள் – அவளது பார்வையில்!

24

கற்பழிக்கப்பட்ட பிறகு, ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறிய உண்மை சம்பவம்!

கற்பழிக்கப்பட்ட போது விட, அதன் பிறகு இந்த சமூகமும், குடும்பமும் அந்த பெண்ணை ஒதுக்கும் போதும், அசௌகரியமான பார்வையை அவள் மீது செலுத்தும் போது தான் அவள் விகுந்த வலியை உணர்கிறாள். தான் கற்பழிக்கப்பட்ட நிகழ்வும், அதன் பின் வாழ்க்கையில் சந்தித்த கோரமான சம்பவங்கள் குறித்தும் விளக்கும் ஓர் அபலைப் பெண்…. எனக்கு நானே விடைகள் கேட்டு காத்திருக்கிறேன். ஆனால், பதில் ஏதும் இல்லை. இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு என் வாழ்வில் நடந்தது ஏன்? யாரோ ஒருவனால் என் வாழ்க்கை கெடுக்கப்பட்டது ஏன்? எனக்கு என் வாழ்க்கை திரும்ப கிடைக்க வேண்டும். கிடைக்காது என தெரியும், ஆயினும் நான் வேண்டுவது எல்லாம் நான் இழந்த என் வாழ்க்கையை தான் (அழுகையுடன்…)

எல்லாம் கிடைத்திருந்த நான்… “எனக்கென ஒரு வாழ்க்கை இருந்தது. அதில் எனக்கான எல்லாமும் கிடைத்திருந்தது. நான் ஒரு காதல் உறவில் இருந்தேன். எனக்கு பல கனவுகள் இருந்தன. எல்லா பெண்களையும் போல நான் சிறகடித்து பறக்க ஆசைகளுடன் எதிர்காலம் நோக்கி காத்திருந்தேன்.”

கிழித்தெறியப்பட்ட என் வாழ்க்கை… “எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. அந்த ஒருநாள் எனது உயிர் கிழித்தெறியப்படும் முன்பு வரை. என் உயிரை லட்சங்களாக, கொடிகளாக துண்டு துண்டாய் வெட்டி போட்டது போல இருந்தது அந்த வலி.”

நண்பர்கள் உடனான பார்ட்டி… “நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் கேளிக்கை நிறைந்த நிகழ்வாக அது நகர்ந்து கொண்டிருந்தது. நேரத்திற்கு வீடு திரும்பிவிட வேண்டும் என்று தான் எண்ணினேன். ஆனால், நண்பர்கள், தோழிகளின் கட்டாயத்தின் பேரில் நேர தாமதம் ஆனது. நான் தனியாக தான் வீடு திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தமும் ஏற்பட்டது. அந்த நேரத்தை மீண்டும் திருப்பி மாற்ற முடியுமா… என்பது மட்டுமே தற்போது எனது விருப்பமாக உள்ளது.”

ரிக்ஷாவிற்காக காத்திருந்தேன்… “அந்த தெருவில் ஆட்டோ ரிக்ஷா கிடைக்குமா என்பதற்காக தனியாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்படி ஒரு வண்டியும் தென்படவில்லை. ஏதோ சரியானதாக இல்லை என்ற உள்ளுணர்வு மட்டும் தோன்றியது. ஒரு நபர் என்னை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தார். நான் ஓடினேன், அவன் என்னை விட வேகமாக துரத்தினான்…”

கோரமான சம்பவம்…. “அவன் மிகவும் பெரியவனாக இருந்தான், என்னை தரையில் தள்ளி வீழ்த்தினான். உதைத்தும், அடித்தும், எத்தனை முயற்சித்தும் அவனது பிடியில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல், வலுவிழந்து போனேன்… மூச்சு விடக்கூட முடியாத சூழலில் இருந்தேன். என்னால் அவனிடம் இருந்து தப்ப முடியவில்லை. அவனால் நான் இழந்தது என்னை மட்டும் அல்ல, என் வாழ்க்கையும் தான். அவன் நகர்ந்து சென்ற பிறகு நான் ஒரு உயிர் உள்ள பிணமாக தெருவில் கிடந்தேன்….”

அதன் பிறகு… “நீண்ட முயற்சிக்கு பிறகு மெல்ல எழுந்து, அருகே இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் என நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.”

பெற்றோர்… “பெற்றோருக்கு என் மேல் மிகுந்த கோபம். நான் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றது தான் தவறு என கூறினார். மேலும், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தது நான் செய்து மிக பெரிய தவறு என்றும். இதனால் குடும்ப கவுரவம் தான் பாதிக்கப்படும் என்றும் கூறினர்.”

காதலும் போனது… “என் காதல் தான் என் வாழ்க்கை, அது எனக்கான அனைத்தும் என எண்ணியிருந்தேன். என் காதலன் எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருப்பான் என எண்ணினேன். ஆனால், நடந்தது வேறு. பெரிய சண்டையிட்டு என்ன கடந்து சென்றான் முழுவதுமாய்.”

தனிமையில் வாடினேன்… “என்னை இழந்தேன், என் வாழ்க்கையை இழந்தேன், என்னை நானே அசிங்கமாக உணர்ந்தேன். எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் என் வாழ்க்கையில் எதுவும் இல்லை என கருதினேன்.”

மரணமே தீர்வு! “மரணம் தான் இதற்கான தீர்வு. தற்கொலை செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். இனிமேலும் வாழ்ந்து என ஆக போகிறது என்று தான் தோன்றியது. ஆனால், இன்னும் எத்தனை நாட்கள் தான் கற்பழிக்கப்பட்ட பெண்கள் இறப்பதும், கற்பழித்தவர்கள் உல்லாசமாக தெருவில் அலைவதுமாக நாட்கள் கழியும். தினமும் விடியும் காலை, ஒரு நாள் எனக்காய், எனக்காக விடியாதா என்ன? விடியும் அதனால் வரை என் முயற்சிகள் தொடரும். என் வாழ்க்கை மீண்டும் என் கைகளில் அகப்படும். ஆனால் ஒன்று இனிமேலும், பெண்கள் இரவில் நடமாடுவதும், ஆடையும் தான் கற்பழிப்புக்கு காரணம் என கூறாதீர்கள்.”