Home ஜல்சா விரைவில் ரிலீசாகிறது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு

விரைவில் ரிலீசாகிறது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு

24

பாலிவுட் திரையுலகில் கலக்கி வரும் கவர்ச்சி நாயகி சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக விரைவில் வெளியாகவுள்ளது.

கனடாவில் ஆபாச பட நடிகையாகத் திகழ்ந்தவர் சன்னி லியோன். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சன்னி லியோனின் உண்மையான பெயர் கரேன்ஜித் கெளர் வோரா.

ஆபாச படங்களில் நடிக்க தொடங்கிய போது தனது பெயரை சன்னி லியோன் என மாற்றிக்கொண்டார். ஏராளமான பலான படங்களில் நடித்த இவர், குத்து பாடலுக்கு நடனமாடி பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து தற்போது பல பாலிவுட் படங்களிலும் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அது உண்மையாகியுள்ளது.

இதுகுறித்து சன்னி லியோனே தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

நான் ஏன் கனடாவிலிருந்து வெளியேறினேன்?. சன்னி என்ற பெயரை ஏன் தேர்வு செய்தேன்?. எனது வாழ்க்கை எப்படி இருந்தது?. சன்னிக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்,

#கரேன்ஜித்டூசன்னி, எனது வாழ்க்கை வரலாறு விரைவில் ஸீ5-இல் வரவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து விரைவில் பிரபல ஆன்லைன் ஸ்டீரிமிங் தளமான ‘ஸீ5’-இல் சன்னி லியோன் வாழ்க்கை பற்றிய படத்தை காணலாம்.

தற்போது சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப் படம் மூலம் தமிழில் அவர் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

Previous articleமாதவிடாய் தாமதமாக 9 காரணங்கள்
Next articleஉடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!