Home உறவு-காதல் பெண்களே உங்களது காதலன் /கணவன் கட்டிப்பிடிக்கும் 8 விதங்களும் அதன் அர்த்தங்களும் ..?விபரம் உள்ளே

பெண்களே உங்களது காதலன் /கணவன் கட்டிப்பிடிக்கும் 8 விதங்களும் அதன் அர்த்தங்களும் ..?விபரம் உள்ளே

64

captureகட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி விலங்குகளின் மத்தியிலும் இயல்பு தான்.

ஆனால், உறவு, காதல் என வரும் போது கட்டியணைப்பதில் பல விதம் உள்ளன. ஒவ்வொரு மாதிரி கட்டியனைப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என கூறப்படுகிறது. காதல் உணர்வு பெருக்கெடுக்கும் போது ஆண்கள் 8 விதமாக கட்டிபிடிப்பது உண்டாம்.

அவை என்னென்ன, அவற்றின் அர்த்தங்கள் என்ன என்று இனிக் காண்போம்…

வேகமாக கட்டியணைப்பது
மனதில் நிறைந்த மகிழ்ச்சி அல்லது அந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு.

தூக்கிப்பிடித்து கட்டியணைப்பது
உங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் இது போல தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.

சுழற்சி முறையில் கட்டியணைப்பது
அதீத காதல் அல்லது “அந்த” எண்ணங்கள் அதிகரிக்கும் போது ஆண்கள் மிகவும் இந்த முறையில் கட்டியணைப்பதுண்டு.

இறுக்கமாக கட்டியணைப்பது
தன் துணையைவிட்டு பிரியக் கூடாது என்று ஆண்கள் எண்ணும் போது இதுப் போன்று இறுக்கமாக கட்டியணைப்பார்கள்.

கண்களை பார்த்தவாறு கட்டியணைப்பது
காதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.

தலைகள் ஒட்டியது போல கட்டியணைப்பது
வெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.

சுருக்கு போல கட்டியணைப்பது
ஆண்களுக்கு பிடித்த விஷயம் / செயலை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.

ஒரு கையில் கட்டியணைப்பது
ஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை அல்லது வெறுமென கட்டிப்பிடிப்பது போன்றதாகும்.