Home வீடியோ சொன்னா நம்பமாட்டீங்க, இந்த 5 பொருட்களும் ஆரம்பத்தில் ஆண்களுக்காக கண்டுப்பிடிக்கப்பட்டது!

சொன்னா நம்பமாட்டீங்க, இந்த 5 பொருட்களும் ஆரம்பத்தில் ஆண்களுக்காக கண்டுப்பிடிக்கப்பட்டது!

35

400x400_MIMAGE83a2a19d4c12748e9dd745371e88e831காலப்போக்கில் நாம் பலவற்றை மறந்துவிடுகிறோம். அல்லது ஒரு பொருளை எதற்காக கண்டுபிடித்தோமோ அதைவிட்டு பிற விஷயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம்.
ஃபேஷன் என்ற பெயரில் ஆண்கள் உடுத்தும் ஆடைகளை பெண்கள் உடுத்துவதும். பெண்பால் ஆடைகள் போல இருப்பதை ஆண்கள் உடுத்துவதும் இன்று சர்வசாதாரணம்.
ஆனால், இன்று பெண்கள் பயன்படுத்தும் சில முக்கியமான விஷயங்கள் முந்தைய காலத்தில் ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
இதில் சில பொருட்கள் அட, இதுக் கூடவா ஆண்களுக்கு கண்டுப்பிடிக்கப்பட்டது என்றிருக்கும். ஆனால், அவை, வேறு காரணங்களுக்காக ஆண்களுக்கு தயாரிக்கப்பட்டது.
பிரான்ஸில் போர் நடந்துக் கொண்டிருந்த காலத்தில், நர்ஸ் சிலர் தான் இதை உண்மையில் கண்டுபிடித்தனர். போர் வீரர்களுக்கு அதிகமாக இரத்தம் வெளியாவதை தடுக்க இதை பயன்படுத்தினர்.

இன்று ஹை-ஹில் அணிந்த பெண்ணை கிண்டல் அடிக்காத ஆண்களை பார்ப்பதே கடினம். ஆனா, உண்மையில், பெர்சியன் இராணுவத்தில் இருந்த வீரர்கள் குதிரை மீத எளிதாக ஏறுவதற்காக இந்த ஹை-ஹீல்ஸ் ஆரம்பக் காலகட்டத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

பின்க் நிறம் என்றாலே பெண்களுக்கானது என்ற கண்ணோட்டம் தான் இருந்து வருகிறது. ஆனால், 18-ம் நூற்றாண்டில் இது ஆண்பாலை குறிக்கும் நிறமாக தான் இருந்து வந்தது. மேலும், இது போருக்கான தனித்துவமான நிறமாகவும் கருதினர்.

முந்தைய காலத்தில் பெர்சியாவில் இருந்து பெர்சிபோலிஸ் எனும் நகரத்தை சேர்ந்த ஆண்கள் காதணிகளை அணிந்து வந்துள்ளனர். இதை ஒரு அலங்கார பொருளாக அவர்கள் அணிந்து வந்தனர் என சில கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது.

தாங்க்ஸ் என்பது பெண்களை செக்ஸியாக காட்டும் ஒருவகையான உள்ளாடை ஆகும். இந்த வகை உள்ளாடை முதலில் ஆண்களுக்கு தான் தயாரிக்கப்பட்டது. இது, ஆண்களின் பிறப்புறுப்பு பாதுகாப்பாக இருக்க பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது ஆகும்.

ஆரம்பக் காலத்தில் ஆண்கள் தான் மெட்டி அணிந்து வந்தனர். இது திருமணமான ஆண்களின் அடையாளமாக இருந்து வந்தது.
தலைநிமிர்ந்து நடக்கும் ஆண்கள், பெண்களின் கழுத்தில் தாலியை கண்டாலும், தலை குனிந்து நடக்கும் பெண்கள் ஆண்களின் கால்களில் மெட்டியை கண்டாலும், அவர் திருமணம் ஆனவர், என தங்கள் ஆசையை கட்டுப்படுத்தி கொள்வர், என்ற கூற்றும் கூறப்படுகிறது.