Home சூடான செய்திகள் உங்கள் உள்ளாடைகளை எப்பொழுது மற்றவேண்டும் தெரியுமா?

உங்கள் உள்ளாடைகளை எப்பொழுது மற்றவேண்டும் தெரியுமா?

87

சூடான செய்திகள்:நாம் கடைகளில் வாங்கும் பாக்கெட் செய்யப்பட்ட சில உணவுப் பொருள்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்களில் அதற்குரிய காலாவதி தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அபப்டி குறிப்பிடப்பமாத நாம் பயன்படுத்தும் சில பொருள்களை எவ்வளவு நாள் வே்ணடுமானாலும் பயன்படுத்தலாம்.

அதற்கு காலாவதியே கிடையாது என்று நனைத்தால் அது முற்றிலும் தவறு. அப்படி நாம் பயன்படுத்தும் சில முக்கியமான பொருள்களின் காலாவதி காலகட்டங்களை எப்படி அறிந்து கொள்வது? அதைப் பற்றி இங்கே விளக்கமாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

உணவும் மருந்தும் நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கு மட்டுமே காலாவதி தேதிகள் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல, சிலர் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் அன்றைய தேதி வரையிலும் அந்த பொருள்களைப் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. சில தினங்களுக்கு முன்பாகவே அதை விட்டுவிடுவது நல்லது.

எதை மாற்ற வேண்டும்? சிலர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கூட, ஒரே உள்ளாடையைத் திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள். அதெல்லாம் தவறு என்று தெரிந்தும் கூட அஜாக்கிரதையாக இருப்பது தான் நல்லதல்ல. அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படுகின்ற அரிப்பு, பாக்டீரியா தொற்று ஆகியவற்றுக்கு தேவையில்லாமல் மருந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு மிக முக்கிய காரணமே அவர்களுடைய உள்ளாடை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. உள்ளாடை மட்டுமல்ல, டூத் பிரஷ், டவல், சீப்பு, தலையணை, மெத்தை விரிப்பு என எல்லாவற்றுக்கும் சில காலாவி காலகட்டங்கள் இருக்கின்றன. அதை தெரிந்து கொண்டு மாற்றுங்கள். அதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய பல் துலக்கும் டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். ஏனென்றால் இதனால் கூட, நோய்த்தொற்று, உடல்நலக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, வீட்டில் குழந்தைகள் பயன்படுத்துகிற டூத் பிரஷ்ஷை கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியே தீர வேண்டும்.

தலையணை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது புதிதாகத் தலையணைகளை மாற்றிவிட வேண்டும். வீட்டில் அதிகமாக தூசி சேருகின்ற இடமே இந்த தலையணை தான். மற்றொரு முக்கியமான விஷயம், இதனுடைய ஷேப் மாறி கழுத்து வலி வர ஆரம்பித்துவிடும். அதிலிருக்கும் தூசியிலிருந்து தும்மல், சருமத்தில் அரிப்பு, இருமல் ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றினாலும் கூட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது நன்கு துவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

உள்ளாடைகள் வருடத்திற்கு ஒருமுறையாவது கட்டாயமாக உங்களுடைய உள்ளாடைகளை நிச்சயம் மாற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால் அதன்வழியே பாக்டீரியா தொற்றுக்கள், அந்தரங்கப் பகுதியில் அரிப்பு, எரிச்சல், புண் போன்ற பிரச்சினைகள் வந்து விடும். முக்கியமாக உள்ளாடைகளை சரியாகத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், ஐந்தில் ஒரு ஆண் கட்டாயம் தினமும் சுத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை என்று தெரிய வந்துள்ளது.