Home சூடான செய்திகள் இனிய தாம்பத்யத்துக்கும் உள்ளாடைக்கும் இவ்வளவு சம்பந்தம் இருக்கா?….

இனிய தாம்பத்யத்துக்கும் உள்ளாடைக்கும் இவ்வளவு சம்பந்தம் இருக்கா?….

21

நீண்டகாலம் நீடிக்கும் இன்பமயமான தாம்பத்திய வாழ்க்கையில் உள்ளாடைகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது தெரியுமா? கச்சிதமான உள்ளாடைகளைத் தேர்வு செய்யத் தெரிந்துவிட்டால் போதும் இனி உங்கள் இல்லறவாழ்க்கை சுகத்துக்கு எல்லை இருக்காது. உங்கள் துணை கிறங்கி உங்கள் மடியில் சாய்ந்து மகிழ்வார்.

அப்படிப்பட்ட சொக்குப்பொடியை வைத்திருக்கும் கவர்ச்சி உள்ளாடைகளை இந்தாண்டு காதலர் தின ஸ்பெஷலாக எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஆன்லைனில் கவர்ச்சி உள்ளாடைகளை அள்ளித்தெளித்துவரும் Lingerie Store உரிமையாளர் ராஸ்மின் குன்னத்தொட்டத்தில் தரும் சில டிப்ஸ்:

-உள்ளாடைகள் விஷயத்தில் விலையை பார்க்கக்கூடாது. தரத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும். கண்ணுக்கு கவர்ச்சியாக இருப்பதுமட்டும் போதாது. கச்சிதமான அளவு, வடிவம், தரம், தொந்தரவுகள் இல்லாத பொருத்தமான அணிகலனாக இருக்க வேண்டும். இதெல்லாம் மலிவான டிஸ்கௌண்ட் விலையில் கிடைக்கும் உள்ளாடைகளில் மிஸ் ஆகலாம். உஷார்!

-வாங்கப்போகும் உள்ளாடையின் பிராண்டை பற்றி முழுக்க தெரிந்து கொள்வது அவசியமாகும். சந்தையில் அந்த பிராண்டுக்கு உள்ள மதிப்பு, வரவேற்பு, அளிக்கப்படும் விலைச்சலுகைகள் குறித்தும் தீர விசாரித்துவிடுங்கள். இதன்மூலம் அந்த பிராண்டு பொருளை வாங்கலாமா என சரியான முடிவை எடுக்கலாம்.

-உங்களோட உள்ளாடையின் சரியான சைஸ் மிகவும் முக்கியம். இப்போதுள்ள சைஸை கணக்கெடுத்து அப்புறமா வாங்குறது பெஸ்ட்.

-உள்ளாடைகளைப் பொருத்தமட்டில் உடல் சுகாதாரத்துக்குத்தான் முதல் சாய்ஸ் தர வேண்டும். திருப்தியில்லாவிட்டால் உள்ளாடைகளை திருப்பித்தந்து பணம் வாபஸ் பெறலாம் என எந்த இணையதளமும் சொல்கிறதா?
அவங்களுக்கு ஒரு கும்பிடப் போட்டுவிட்டு வாங்காதீங்க. எப்பவும் கரைகள் இல்லாத, சுத்தமாக பேக்கிங்கில் உள்ள அணிகலன்களையே வாங்குங்க.

-உடல் அமைப்புக்கு பொருத்தமான கச்சிதமான உள்ளாடைகளையே தேர்வு செய்யவேண்டும். அவயங்களை கவர்ச்சியாக எடுத்துக்காட்டும் அணிகலன்களை தெரிவு செய்யுங்கள்.

-அந்தந்த காலத்துக்கு ஏற்ப உள்ளாடைகளை வாங்குங்கள். கோடைக்காலத்துக்கு காட்டன், குளிருக்கு உல்லன் தயாரிப்புகளை வாங்கினால் நல்லது.

-உள்ளாடைகளைப் பொருத்தமட்டில் அவைதான் உங்களது எழில்மேனியை மேலும் கவர்ச்சியாகக் காட்டும். எனவே பிடித்த நிறம், கண்கவர் வடிவம் போன்ற சமாசாரங்களில் விட்டுக்கொடுத்தலே இருக்கக்கூடாது. அடுத்தவர் அபிப்ராயத்தைப் பற்றி கவலையில்லை.

நீங்கள் தேர்வு செய்யும் உள்ளாடை படுகவர்ச்சியாக இருந்துவிட்டாலும் பரவாயல்லை, அதில் நீங்கள் அழகாகத் தெரிவீர்கள் என்று நம்பினால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடும். அப்புறம் உங்க பார்ட்னர் கண்மூடாம உங்களை உள்வாங்குவார் பாருங்களேன்!