Home சமையல் குறிப்புகள் ஈஸியா செய்யலாம்… இந்திய சிக்கன் குழம்பு…

ஈஸியா செய்யலாம்… இந்திய சிக்கன் குழம்பு…

24

சிக்கன் ரெசபிகளில் பிரபலமான ஒன்று இந்திய சிக்கன் குழம்பு. விடுமுறை நாட்களில் வித்யாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புவோர் இந்த இந்திய சிக்கன் குழம்பு செய்து ருசிக்கலாம். இப்போது இந்த இந்திய சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையானவை

கோழியின் நெஞ்சுப்பகுதி – 500 கிராம்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
கறி மாலசா தூள் – 4 டீஸ்பூன்
வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – 1 டீஸ்பூன்
பூண்டு – 1 டீஸ்பூன்
தக்காளி – 200 கிராம்
தண்ணீர் – 120மிலி
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – அழகுப்படுத்த

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சிக்கன் நெஞ்சுப்பகுதி, 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டீஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து 1 டீஸ்பூன் காய்ந்ததும் 100 கிராம் நறுக்கிய வெங்காயம், 1 டீஸ்பூன் பூண்டு, இஞ்சி சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மசாலா கலந்து வைத்துள்ள சிக்கன், தக்காளி, 2 டீஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிக்கனை 10 அல்லது 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

அதில், 120 மிலி தண்ணீர் சேர்த்து 1 1/2 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு 5 அல்லது 7 நிமிடங்கள் வேகவைக்கவும்.

அதன் மேலாக கொத்தமல்லி தழையை தூவி விட்டு பரிமாறவும்.