Home காமசூத்ரா மறுபடியும் காமசூத்திரம் சொல்லும் உறவு முத்தங்கள்

மறுபடியும் காமசூத்திரம் சொல்லும் உறவு முத்தங்கள்

297

காமசூத்திர மந்திரங்கள்:காதலர்கள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையாலாம். அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப்படையிலேயே முத்தங்களின் பெயர்களும் அமைகின்றன. பொதுவாக, முத்தங்களும், தழுவல்களும் ஒரு ஆணும், பெண்ணும் கலந்து இன்பம் அனுபவிக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்படும் காதல் சமிக்ஞைகள் என்கிறது காமசூத்திரம். இவற்றை 5 வகைகளாகவும் அது பிரித்துக் கூறுகிறது. அவை…

இங்கு கூறப்படுபவை காதலன்-காதலி, கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும்.

உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)

கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)

பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)

சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)

சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)

உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)

காதலன் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப் பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண்டுவது இந்த முறையாகும்.

கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)

காதலன் காதலியைப் பார்க்காமல் வேறு ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக்க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது இந்த வகை.

பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)

காதலி தூங்கிக் கொண்டிருக்கிறாள். பணி முடித்து வெகு நேரம் சென்று வீடு திரும்பிய காதலன், தனது ஆசையை அவளுக்கு உணர்த்தும் விதத்தில் அவளது கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது இந்த வகை.

சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)

காதலன் தன் காதலை வெளிப்படுத்த, முகக் கண்ணாடி அல்லது நீர் நிலையில் தெரியும் காதலின் முகத்தில் முத்தமிடுவது இந்த வகை

சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)

காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படுத்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல்லது சிலைகளுக்கு முத்தமிடுவது இந்த வகை

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான் அவை.

இவை தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்ப டித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.

ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளி டம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கி றான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.

இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்தி ருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சி களில் லயித்திருக்கும் போது காதலன் அ வளை நெருங்கி குனிந்து கை விர ல்களையோ, கால் விரல்க ளையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை. காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம் மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது க்கி வைத்து விட்டார்கள்.

Previous articleகட்டான உடம்பைக் கொண்ட பெண்களை விட மட்டரில் கிங் ஆனா
Next articleஉங்கள் காதல் எப்படி வந்தது?ஏன் வந்தது தெரியுமா?