Home ஆண்கள் ஆண்மை பெருக வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம்.

வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம்.

60

வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப்
பார்த்தனர்.

ஆய்வுக்காலத்தின்போது அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.

அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது.

வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.