Home உறவு-காதல் பெண்ணை இலகுவாக இம்ப்ரெஸ் செய்ய 10 ஐடியாக்கள்

பெண்ணை இலகுவாக இம்ப்ரெஸ் செய்ய 10 ஐடியாக்கள்

501

காதல் உறவு:பெண்கள் என்றாலே மேக்கப், ஆடை ஆபரணங்கள் என்ற விஷயங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். பொதுவாக எல்லா ஆண்களும் பெண்களை கவர எண்ணுகின்றனர்; பெண்களும் ஆண்களின் கவனத்தை பெற எண்ணுகின்றனர். இந்த ஒரு காரணத்தினாலேயே ஆண் – பெண் உறவு ஒருவித ஈர்ப்புடன் தொடங்கி, காதலாய் கல்யாணமாய் மாறி கடைசி வரை நீடிக்கிறது.

இந்த பதிப்பில் ஆண்கள் பெண்களை கவர அதாவது அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, இம்ப்ரெஸ் செய்வது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்.

1. நறுமணம்
விளம்பரங்களில் காண்பிப்பது போல, FOG சென்ட் அடித்தால், பெண்கள் ஆண்களை சுற்றி வருவதாய் காண்பிக்கின்றனர். உண்மையில் மூக்கை மூட வைக்கும் நாற்றம் இல்லமால், மூக்கை உறுத்தாத லேசான சுகந்தமான மணம் வீசும் வகையிலான நறுமண திரவியங்களை பயன்படுத்துதல் வேண்டும். ஆண்கள் தங்களின் உடல்வாகு அறிந்து நறுமண திரவியங்களை தேர்வு செய்து பயன்படுத்துதல் வேண்டும். இது பெண்களை கவர, அவர்களிடையே நல்ல மதிப்பைனை பெற எளிதில் உதவும்.

கேட்க அல்லது படிக்க சிரிப்பாக இருக்கலாம்; ஆனால், உண்மையில் இது தான் ஆண் – பெண் ஈர்ப்பில் நடக்கும் முதல் விஷயம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

2. புருவம்
நறுமணத்திற்கு பின் இரண்டாவதாக பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விஷயம் புருவங்கள். ஆகையால், அழகான வடிவான ஆண்மையைக் காட்டும் வகையில் புருவங்களை வளர்க்க முயலுங்கள்; அதை விடுத்தது அடர்ந்த காடு போல புருவங்களை வளர்த்து, பார்க்கும் பெண்களை பயமுறுத்த கூடாது. புருவத்தில் காயங்கள் இருந்தால், முடி வளராது இருந்தால் அதற்கான பிரத்யேக நடவடிக்கைளை மேற்கொண்டு கவரும் வகையிலான புருவங்களை வளருங்கள்;

3. மீசை பெரும்பாலான பெண்களுக்கு மீசை உள்ள ஆண்களை தான் அதிகம் பிடிக்கிறது; அதிலும் மிரட்டாத வகையில், முகத்தின் அழகை மேலும் அழகாக்கும் மீசையை அமைக்க வேண்டும். மீசையை காடு போல வளர்த்து, வீரப்பன் போன்று காட்சியளிக்காமல், கட்சிதமாக கத்தரித்து, அழகாக வைத்திருக்க முயலவும். உங்கள் மீசை பெண்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. மினுமினுப்பு ஷேவ் செய்தால், வெட்டுக்காயம் எதுவும் இன்றி மொழுமொழு என்று இருக்காமல், நல்ல முக தோற்றத்தை தரும் வண்ணம் செய்யவும். மேலும் முகத்தில் மற்றும் உடலில் ஏற்படும் செல்களின் இறப்பை குறைக்க, உடலை ஒருவித மினுமினுப்புடன் வைக்க, அதிக நீர் பருகுங்கள்; மேலும் மாஸ்டரைசர், தளர்த்திகள் போன்ற மேக்கப் பொருட்களை பயன்படுத்தி எந்நேரமும் புத்துணர்வுடன் திகழ முயற்சியுங்கள். அந்த புத்துணர்வு உணர்வே, உங்கள் முகத்தை மினுமினுப்புடன் வைக்க உதவும்.

5. சோப் உடலில் மற்றும் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாத, அதிக மணம் வீசாத, ஓரளவு மணம் கொண்ட சோப்பினை பயன்படுத்த முயலுங்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தும் சோப் வியர்வையை முற்றிலும் போக்குகிறதா, உடலுக்கு புத்துணர்வு தருகிறதா என்று முயற்சித்து அறியவும். வியர்வை வாசம் வராமல், சுகந்தமான மணம் உங்களிடமிருந்து வெளிப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்; இது பெண்களை கவர அதிகம் உதவும்.

6. தலைமுடி ஆண்கள் தன் தலைமுடிக்கு கண்டதையும் பயன்படுத்தி, முடியை கெடுத்து விடாமல் முடியை அழகுடன் திகழும் வண்ணம் பராமரிக்க வேண்டும். ஏனெனில் முகம் என்னதான் அழகாக இருந்தாலும், அதற்கு முழுவடிவம் அளித்து மேலும் அழகு படுத்துவது தலைமுடி தான். எனவே, முடியை கட்சிதமாக உங்களுக்கு பிடித்த வடிவில் வெட்டி, அல்லது முக அமைப்பிற்கு ஏற்றாற் போல் கத்தரித்து, உங்கள் அழகால் அழகு பெண்ணை உங்களுக்கு சொந்தமாக்க முயலுங்கள்; இது நல்ல பலனை தரும்.

7. தாடி உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு, தாடி வைத்தால் நன்றாக இருக்குமா அல்லது இல்லையென்றால் நன்றாக இருக்குமா என்று சோதித்தறியுங்கள். பின் அடர்ந்த தாடி இருக்க வேண்டுமா அல்லது ட்ரிம் செய்த தாடி கொண்டிருந்தால், நீங்கள் அழகாக இருப்பீர்களா என்று பாருங்கள். பின் அதற்கேற்றவாறு தாடியை வளர்த்து, அதனை சரியாக பராமரியுங்கள். தாடி உள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

8. உதடுகள் ஆணின் உதடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பார்த்து பெண்கள் மனம் அவர்களை மதிப்பிடுகிறது; அதாவது, ஆண்களின் உதடு வெடிப்புகளுடன், கருப்பாய் இருந்தால், அது நல்ல மதிப்பை பெண்களிடையே ஏற்படுத்தாது. எனவே, லிப் பாம் போன்ற மேக்கப் ஐட்டங்களை பயன்படுத்தி உதட்டினை எப்பொழுதும் ஈரப்பதத்துடன், கவரும் தன்மையுடன் வைத்திருக்க முயலுங்கள்

9. உடலமைப்பு உங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையி கொண்டிருக்க முயலுங்கள். ஃபிட்டாக அதாவது அதிக குண்டும் இல்லாது, அதிக ஒல்லியும் இல்லாது உடல்வாகுக்கேற்ற எடை கொண்ட ஆண்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன. ஆகையால், சரியான உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றை சரியாக கடைபிடித்து, அழகான, செக்ஸியான உடலமைப்பு கொண்டு திகழ முயற்சியுங்கள்.

10. ஆடை உங்களுக்கு பொருந்தும், உங்கள் உடல்வாகை மேலும் வசீகரமாக்கும் ஆடைகளை தேர்வு செய்து அணிய முயலுங்கள். பார்மல் அல்லது கேசுவல் என எது அணிந்தாலும், உங்களை பார்க்கும் பெண்களுக்கு உங்களை கட்டியணைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் வகையில், உங்கள் உடலை, ஆடையை, முகத்தை வைத்திருக்க முயலுங்கள்; உங்களின் ஒட்டுமொத்த உருவம் உடை, உடல், முகம் என அனைத்தும் வசீகரத் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த பத்து குறிப்புகளை சரியாக பின்பற்றினால், எந்த பெண்ணையும் அசால்ட்டாக கவரலாம்; அவர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி புரியலாம் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். பெண்களின் மனதை புரிந்து கொண்ட ஒரு பெண் எழுதிய இந்த பதிப்பு, ஆண்களான உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பதிப்பை முடிக்கிறேன்.

Previous articleஆண்மை இல்லாதவன் கூறிய மனைவிக்கு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ அனுப்பிய கணவன்
Next articleஆண்களின் ஆண்குறி விறைப்புத்தனமையை பாதுகாக்கும் எளிய வழிகள்…