Home அந்தரங்கம் இல்லீகல் செக்ஸ்ம் அதன் விளைவுகளும்!

இல்லீகல் செக்ஸ்ம் அதன் விளைவுகளும்!

70

captureமனித சமுதாயம் வகுத்த பண்பாட்டை மீறிய, மனக்கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி உறவு வைத்துக் கொள்வது தான் இல்லீகல் செக்ஸ். இல்லீகல் செக்ஸ் ரிலேஷன்ஷிப்பால் எத்தனையோ பமிலீஸ் சிதறிப் போயிருக்கிறது. தினமும் பேப்பரில் வரும் செய்திகளில் 25 சதவீதம் கள்ளக் காதலால் மனைவி வெட்டிக் கொலை, கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என்ற செய்திகள் ஏராளம். இதற்கெல்லாம் என்ன காரணம்?

1. மென்டல் டார்ச்சர்.
2. இருவரிடையே போட்டோந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமை.
3. மனைவியின் உடல்நிலையைப் புரிந்து கொள்ளாமல் கட்டாய உறவு.
4. அன்பு காட்டாமல் மனைவியை செக்ஸ் அடிமையாய் நினைத்தல்.

இதெல்லாம் ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே விரிசல் ஏற்பட்டு மற்றொரு கள்ள உறவுக்கு அடித்தளமாக இருப்பது. அதேபோல் கண்டதும் காதல் என்பது மாறிப் போய் கண்டதும் காமம் என்ற கான்சப்ட்டுக்கு பெரும்பாலான ஆண்கள் வந்துடறாங்க. இது சரியா? தப்பா? என்று ஆணின் மனம் எடைப் போட்டு முடிவதற்குள் தங்களது ஆசையைத் தீர்த்துக் கொண்டு ஜுட்.

பொதுவாக, நாற்பது சதவீத ஆண்கள் டிரிங்ஸ் சாப்பிட்டுவிட்டு உடல் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பது குடும்ப பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆல்கஹால் அருந்திவிட்டு உறவுக்கு வரும் ஆண்களை பெண்கள் அடியோடு வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பு ஒரு காயமாக மனதில் வேர் விட்டு ஆலமரமாக வளர்ந்து விடுகிறது. அப்புறம் என்ன? மற்றொரு ஆணின் அன்பான பேச்சு, அரவணைப்புக்கு அடிமையாகி செக்ஸ் உறவுக்கு பாலம் அமைத்து விடுகிறார்கள். தட் இஸ் இல்லீகல் செக்ஸ்.

டிரிங்ஸ் அருந்திவிட்டு உடல் உறவுக்கு ஈடுபடும்போது எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்கிறது என்ற ஆண்களின் முட்டாள்தனமான எண்ணம்தான் காரணம். ஆணின் உடல் அமைப்பில் செக்ஸ் ஹார்மோன்கள், விந்தணுக்கள் உற்பத்தியை ஆல்கஹால் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும். விந்தணுக்களின் பாதிப்பு எரெக்ஷனில் (விறைப்பு தன்மை) தெரிந்துவிடும். அப்புறம் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவஸ்தை பட வேண்டியதுதான்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளும் என்பது பழமொழி. இளமை நெருப்பு எரியும் டீன் ஏஜ் பருவத்தில் ஆணும் பெண்ணும் அடுத்த கட்ட உறவுக்கு ரெடியாக இருப்பது இயற்கை. அதை தடுப்பது செல்ஃப் கண்ட்ரோல் அல்லது மனக்கட்டுப்பாடு.

ஒரு பெண், டீன் ஏஜை நெருங்கும் பெண், தனது உடல், செக்ஸ் விஷயத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பின் விளைவை அனுபவிப்பவள் அவள் தானே!

செக்ஸ் ரிலேஷன்ல… போதும்…..இது போதும் மனமே என்ற லிமிட்டுக்குள் நிற்கும் பெண் ஒரு ரகம். அதாவது, தனது செக்ஸ் எதிர்பார்ப்புகள் கணவனிடம் இருந்து கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று தனது ஆசைகளை அடக்குவதுதான். மற்றொரு ரகம், தன்னுடைய ஆசையை எதிர்பார்ப்புகளை தனக்கு பிடித்த செக்ஸ் ஆக்ஷனை மற்ற ஆணிடம் ஷேர் பண்ணிக்க துணிந்து கொண்டு ஈடுபடுவது.

அதேபோல், சந்தேகத்தோடு, சந்தேக பார்வையோடு, சந்தேக அம்புகளை தொடுக்கும் பல ஆண்கள் கிழித்த சந்தேக கோட்டால் சந்தோஷக் கேடு ஏற்பட்டு மற்றொரு உறவுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட பெண்களும் உண்டு.

தன் சொந்த மனைவியின் விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், சுகம், இன்பம் ஆகியவற்றை அறிந்து தன் மனைவியையும் சந்தோஷபடுத்தி தானும் செக்ஸ் உறவில் சந்தோஷபடும் ஆண்கள் எத்தனை பேர்? மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாத ஆண்களின் வாழ்க்கையில் அம்பிகா போன்ற பெண்களும் இருக்கிறார்கள். பெண்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ளும், அவர்களது சைகாலஜியை புரிந்து கொள்ளும் ஆண்களே தாம்பத்ய உறவில், வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

Previous articleசெக்ஸ் வெப்சைட் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்
Next articleபொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்ல‍ல, உளவியலாளர்கள் சொல்றாங்க!