Home சூடான செய்திகள் இல்லறத்தில் ஆண்கள் செய்யும் இந்த 7 பெரிய தவறுகள், மனைவியரை சங்கடப்படுத்தும்!

இல்லறத்தில் ஆண்கள் செய்யும் இந்த 7 பெரிய தவறுகள், மனைவியரை சங்கடப்படுத்தும்!

40

19-1434706992-coversevenworstsexualfearsofmen2காதலிலும், திருமண உறவிலும் நாம் தெரிந்து செய்யும் தவறுகளை விட, தெரியாமல் செய்யும் தவறுகளால் உண்டாகும் தாக்கம் தான் மனதளவில் பெரிய சோகத்தை உண்டாக்கும். சில சமயங்களில் ஆண்கள் செய்யும் தவறென பெண்கள் கூறுபவை, இதெல்லாமா நாம பண்ணோம், இதெல்லாம் தப்பா என்ன? என்பது போன்ற எண்ணத்தை உண்டாக்கும். ஆம், ஆண்கள் தங்களுக்கே தெரியாமல் செய்யும் சில செயல்கள் தான் பெண்களை அதிகமாக ஈர்க்கிறது. அந்த செயல்களை ஆண்களே அவர்களை அறியாமல் கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொள்ளும் போது, பெண்கள் மனதில் ஆண்கள் நேசிப்பதை குறைத்துவிட்டார்கள் என்ற எண்ணம் பிறக்க செய்கிறது.

நேரம்! ஒரு உறவின் ஆரம்பத்தில் ஆண் சரியாக செய்யும் ஒன்றும், உறவில் இணைந்த பிறகு ஆண் செய்யும் தவறும் நேரம் தான். ஆரம்பத்தில் ஆண்கள் அதிகப்படியான நேரத்தை தங்களுக்கான பெண்ணுடன் செலவழிப்பார்கள். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல, இவள் தனக்கானவள் தானே, எங்கே போய்விட போகிறாள் என்ற எண்ணத்தில், நேரம் செலவழிப்பதை குறைத்துக் கொள்வார்கள். இந்த தவறு, பெண்கள் மனதில், ஆண்களுக்கு தங்கள் மேலான ஈர்ப்பு குறைந்துவிட்டது என்றும், சிலபல சந்தேகங்கள் எழவும் காரணமாக இருக்கின்றன.

முன்னுரிமை! ஆண்கள் நேரத்திற்கு ஏற்ப முன்னுரிமை அளிப்பவர்கள், பெண்கள் பழக்கத்தின் பேரில் முன்னுரிமை அளிப்பவர்கள். இதனால் சில சமயத்தில் ஆண்கள் மனைவி வீட்டில் இருக்கும் போது, அல்லது மனைவி எங்கேனும் அழைக்கும் போது அதை தவிர்த்து, அலுவலக / தோழர்களுடன் வெளியே சென்றுவிடுவது பெண்கள் மனதில் வலுவான சோகம் உண்டாக காரணமாகிவிடுகிறது. எனவே, அவர்களுக்கு உரிய முன்னுரிமை அளித்து சந்தோசப்படுத்த ஆண்கள் தவறக் கூடாது.

புறக்கணித்தல்! தன் வேலை அல்லது தனது பாதை சார்ந்து பயணிக்கும் போது துணையை புறக்கணிப்பது தவறு. பெண்கள் எங்கு சென்றாலும் தன் துணையுடன் தான் செல்ல வேண்டும் என விரும்புவார்கள். இதற்கு பாதுகாப்பும் ஒரு காரணம். ஆனால், ஆண்கள் தங்களுடன் மனைவியை அழைத்து செல்வது சுதந்திரம் பறிபோவது போல எண்ணுவார்கள். இதை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் துணையை புறக்கணிப்பதை நிறுத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி! ஏதோ பள்ளியில் நண்பனுடன் சண்டையிடுவது போல, நீ அன்று அப்படி செய்தாய், அதற்காக தான் இதை செய்தேன் என காழ்ப்புணர்ச்சி காண்பிப்பது தவறு. கணவன், மனைவி உறவில் காழ்ப்புணர்ச்சி எழவே கூடாது.

எதிர்பார்ப்பு! அளவிற்கு அதிகமாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம். பரிசு, தாம்பத்தியம், காதல், ஆசை, பயணம் என எதுவாக இருப்பினும் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, மன நிறைவு குறைய ஆரம்பித்துவிடும்.

சுதந்திரம்! என்ன தான் கணவன், மனைவியாக இருப்பினும், அவரவர் மனம் ஒருசில தருணத்தில் அமைதியை, தனிமையை எதிர்பார்க்கும். அந்த நேரத்தில் அவருக்கான இடத்தையும், சுதந்திரத்தை அவரே எடுத்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும். உண்மையில் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.

பொறாமை! நமது போட்டியாளர் நம்மை விட அடுத்த நிலைக்கு சென்றாலோ, அதிகம் சம்பாதித்தால் பொறாமை படலாம். உங்கள் துணை முன்னேறும் போது நீங்களும் உடன் சேர்ந்து மகிழ வேண்டுமே தவிர பொறாமை பட கூடாது. எனவே, ஒரு கணவன் சிறந்த நண்பனாகவும் இருக்க வேண்டும். அவரை ஊக்குவிக்க வேண்டும்.