Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இடுப்பு,தொடைப்பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கணுமா? இதோ இந்த டயட் டீயை அருந்துங்கள்.

இடுப்பு,தொடைப்பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்கணுமா? இதோ இந்த டயட் டீயை அருந்துங்கள்.

23

உடல் எடையைக் குறைப்பதைப் பற்றித் தான் உலகம் முழுவதும் பேசந்சாக இருக்கிறது. அதற்காக என்னென்னவோ முயற்சி செய்து கொண்டும் இருப்பவர்கள் கவனத்திற்கு…

உடல்எடையைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்வது தவறல்ல. ஆனால் ஜீரண மண்டலத்தின் செயலைச் சீராக்கி, ஆரோக்கியமான வழியில் தேவையில்லாத கொழுப்பை கரைக்கும் டயட்டை மேற்கொள்வதே புது்திசாலித்தனம்.

அவ்வாறு இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டுமென்றால், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே டயட் டீ தயாரிக்கலாம். அவற்றைத் தயாரிக்க என்னென்ன பொருட்கள் வேண்டும்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் 800 மில்லி

பட்டை 2 துண்டு

பிரிஞ்சி இலை

கிரீன் டீ பவுடர் – 2 ஸ்பூன்

தேன் 4 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதித்த தண்ணீரில் பட்டை, பிரியாணி இலை, கிரீன் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.

பின் வடிகட்டி, தேவைப்பட்டால் சிறிது சூடுபடுத்தி, தேவையான அளவு தேன் சேர்து்து அருந்த வேண்டும்.

ஒரு நாளைக்கு 3 முறை இந்த டீயை குடித்து வந்தால், இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதை மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள அதிகப்படியான எடையை மிக வேகமாகக் குறைத்திட முடியும்.

மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தும் அனைத்து பொருட்களும் இந்த டீயில் உள்ளதால் இது செரிமானத்தை சீராக்கி, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கிறது.

குறிப்பு : குழந்தைகள், கர்ப்பிண் பெண்கள், பெருஞ்குடல் பிரச்னை உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த டீயை அருந்துதல் கூடாது.