Home இரகசியகேள்வி-பதில் எனக்கு கணவன் இல்லை அந்த ஆசையை பூர்த்தி செய்ய வேறொருவருடன் உறவு வைக்கலாமா?

எனக்கு கணவன் இல்லை அந்த ஆசையை பூர்த்தி செய்ய வேறொருவருடன் உறவு வைக்கலாமா?

894

இரகசியகேள்வி-பதில்:கேள்வி
எனக்கு வயது 47. எனது கணவர் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் ஒரு 63 வயது நபர், தன்னுடைய பாலியல் பங்காளராக இருக்குமாறு என்னைக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், தற்போது அவருடைய விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் நான் கர்ப்பம் தரித்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது. எனக்குத் தகுந்த ஆலோசனையை வழங்கி உதவுங்கள்.

பதில்
உங்களுக்கு இன்னமும் மாதவிலக்கு ஏற்படுகிறது என்றால், நிச்சயமாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஏன் இந்த விபரீத ஆசை என்று சற்று எண்ணிப் பாருங்கள்.

உங்களது பிரச்சினை பற்றிச் சொல்லியிருக்கும் நீங்கள், உங்கள் குடும்ப விபரம் எதையும் தெரிவிக்கவில்லை. உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கினறனரா? நீங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்களா? உங்களைப் பற்றிய உங்கள் அயலவர்களின் எண்ணம் எவ்வாறிருக்கிறது என்பன பற்றிய விபரங்களை நீங்கள் தரவில்லை.

உடல் வேட்கையானது, ஓரிரு மணித்துளிகளுக்குள் அடங்கிவிடும். ஆனால், அது உண்டாக்கும் மனக் குழப்பம் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கும். ஒருவேளை, உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் இதுபற்றி அறிந்துகொண்டால், அவர்கள் மனதில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சுற்றம் சூழ வாழ்ந்து வருகிறீர்கள் என்றால், இந்த விடயம் தெரியவரும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் உங்களை விலக்கியே வைப்பார்கள். அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?

இளம் வயதில் கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் உள்ள தயக்கமே இன்னும் நம் சமூகத்தை விட்டு விலகாத சூழலில், இந்த வயதில், இப்படியொரு ஆசைக்கு நீங்கள் அடிமையாவது நிச்சயம் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் பல வழிகளில் பாதிக்கும்.

உங்களது ஆசை தவறானது என்று யாரும் சொல்லிவிட முடியாது; சொல்லவும் கூடாது. ஏனெனில், அது உங்களது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை உங்களுக்கு சாதகமாக நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், பாதுகாப்பான நாட்களில், பாதுகாப்பான முறைகளை பின்பற்றி அவருடன் பாலியல் உறவில் ஈடுபடலாம். இதனை நீங்கள் ஒரு முறை பரீட்சார்த்தமாக முயற்சித்து பாருங்கள் என்று பரிந்துரைக்கிறோம். ஆனால், நாம் இந்த சமுதாயத்தில் தனித்தனி மனிதர்களாக வாழவில்லை. ஒரு மக்கட்தொகுதியாக இணைந்தே வாழ்கிறோம். அப்படி வாழும்போது, அந்த மக்கட்தொகுதிக்கென்றான சில பண்புகளை நாம் விரும்பியோ, விரும்பாமலோ கடைப்பிடித்தே ஆகவேண்டும். அதில் தவறும் பட்சத்தில், பாதிப்புகள் பாரதூரமானவையாக இருக்கும்.

எனவே, நம்முடைய சமூகத்தில் தொடர்ந்தும் இணைந்து வாழ உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த விபரீத விளையாட்டைத் தவிர்ப்பதே நல்லது.

—————————————————–
கேள்வி:எனது வயது 25. நான் ஒரு பெண். எனது உயரத்துக்கேற்ப உடல் எடை சரியாக இருக்கிறது என்றாலும் மார்பகங்கள் பெரிதாக இருக்கின்றன. என்னைப் பார்க்கும்போது எனக்கே வெறுப்பாக இருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை அல்லாத வேறு வழிமுறைகள் இருந்தால் கூறவும்.

பதில்: உடற்பயிற்சிதான்!
உங்களது பிரச்சினை போன்றே பலரது பிரச்சினையும் அதற்கான தீர்வும் இப்பகுதியில் தரப்பட்டிருந்ததை நீங்கள் அவதானித்­திருக்கலாம். எனவே, உங்களது பிரச்சினைக்கு ஏற்கனவே தீர்வு கிடைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.
அளவுக்கதிகமான மார்பகங்கள் இருக்கும் பெண்கள் நிச்சயமாக உடற்பயிற்சிகள் மூலம்தான் அதன் அளவைக் குறைக்க முடியும். என்ற­போதும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதன்மூலம் பெறுபேறுகள் கிடைப்பது அரிது.
இந்தப் பிரச்சினைக்கு ஹோர்மோன் சிகிச்சை அல்லது பிளாஸ்ட்டிக் சிகிச்சை என்பனவற்றையே பரிந்து­ரைக்க முடியும். ஆனால், அவற்றின் மூலம் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதனால் சற்று அவதானமாகவே அதைச் செய்துகொள்ள வேண்டும்.
—————————————————————–
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும், அளவுக்கு அதிகமானால் சலித்து விடும்..!! இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது..??

பிரகாஷ், நந்தினி காதல் தம்பதி. படுக்கையறைக்கு வந்தாலே பிரகாஷின் தொந்தரவு தாங்க முடியாது. தினமும் உறவு கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பான். இப்போது சில மாதங்களாக தொடுவது கூட இல்லை. நந்தினிக்கே மூடு வந்து கூப்பிட்டாலும் கூட, அவன் ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை கணவனுக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என எண்ணி வருந்தினாள். உண்மையில், பிரகாஷுக்கு நந்தினி நினைத்தது போல எந்தப் பெண் தொடர்பும் இருக்கவில்லை.

அவனுக்கு செக்ஸ் மீது உள்ள ஆர்வம் முழுமையாக வற்றிவிட்டிருந்தது.

எதனால் இந்தப் செக்ஸ் உறவு சலித்து விடும் பிரச்னை ஏற்படுகிறது?

மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல் ரீதியாகவும், சிலருக்கு மன ரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்று பெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இதை `Emotional fatique’ என்று சொல்வோம்.

தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும். மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

இந்தப் செக்ஸ் உறவு சலித்து விடும் பிரச்னையை எப்படி சமாளிப்பது?

முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம்.

செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.

மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.

சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும். அதனால் கவலைப்பட தேவையில்லை.

மனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

By: டாக்டர்

Previous articleபெண்களின் முகத்தில் உள்ள பருக்களை போக்க இலகுவான முறை
Next articleஆணும் பெண்ணும் சுயஇன்பத்தின் போது விடும் தவறுகள்