Home உறவு-காதல் கணவன் மனைவியுடன் வெறுக்கும் சிலசெயல்கள்

கணவன் மனைவியுடன் வெறுக்கும் சிலசெயல்கள்

302

உறவு காதல்:திருமண பந்தத்தில் இணைந்த இருவேறு உள்ளங்கள் ஒருவரை புரிந்து கொள்ள சில காலம் ஆகலாம். இந்த காலகட்டத்திற்குள் கணவன் மற்றும் மனைவி தங்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை பெரிதாக்காமல், விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி வாழ்வதற்கு சரியான புரிதல், ஒருவரைப்பற்றி மற்றவர் அறிந்திருத்தல் தேவை. அந்த புரிதலை தம்பதியருக்கு வழங்கவே இந்த பதிப்பு..

1. சமைத்தல்..
நாள் முழுதும் வேலை செய்து கொண்டும், சமைத்துக் கொண்டும் இருக்கும் மனைவிக்கு ஒரு நாள் கூட ஓய்வு தராது, இது சமைத்துத் தா? அது சமைத்துத் தா? இந்த உணவு நன்றாகயில்லை, உப்பில்லை என்று அடிக்கடி குறைகள் கூறுவதை மனைவிகள் அறவே வெறுப்பர்..

2. நேரம்..
கணவர் மனைவியுடன் நேரம் செலவிடாமல், வேலை மற்றும் தொலைக்காட்சியுடன் மட்டுமே நேரம் செலவிடுவதை முழுதும் வெறுப்பர்.

3. கர்ப்பகாலம்..!
கர்ப்பகாலத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல், உங்களுக்கு உறுதுணையாக இல்லாமல், ஏதாவது கூறி, ஏற்கனவே மாறிக்கொண்டே இருக்கும் உங்கள் மனநிலையை எரிச்சல் படுத்துவதை எந்த மனைவியும் விரும்பமாட்டார்.

4. கர்ப்பகால எடை..!
நீங்கள் கர்ப்பகாலத்தில், அல்லது பிரசவம் முடிந்த பின் அடைந்த உடல் எடையை கேலி மற்றும் கிண்டல் செய்தோ அல்லது உங்கள் மனம் புண்படும் படி கருத்து தெரிவித்தோ உங்களை கஷ்டப்படுத்துவது.

5. விட்டுக் கொடுத்தல்..
அனைத்து மனைவிகளும் விட்டுக்கொடுத்தலை மிக விரும்புவர்; ஆனால், கணவர் தன்னை மாமியாரின் முன்னிலையில், அவரின் அம்மா முன்னிலையில் விட்டுக் கொடுப்பதை அறவே விரும்பமாட்டார்கள்..