Home இரகசியகேள்வி-பதில் அவர் என்னைத் தவறாக நினைக்கிறாறோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.

அவர் என்னைத் தவறாக நினைக்கிறாறோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.

110

கேள்வி: எனக்கு வயது 27. வீட்டில் திருமணப் பேச்சு நடக்கிறது. ஆனால், முதலிரவில் முன்பின் அறிமுக மில்லாத எனது மனைவியோடு என்ன கதைப்பது? உறவை எப்படி ஆரம்பிப்பது? முதலிரவிலேயே உறவுகொள்வதால் என் மனைவி என்னை மதிப்பாரா? முதலிரவில் ஆணுறை பாவிக்க முடியுமா? திருமணம் முடித்த பிறகு தொடர்ந்து வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதால் என் மனைவி என்னை வெறுப்பாளா?

பதில்: ஒரு பெண்ணுடன் அதுவும் உரிமையுடன் சுவார சியமாகக் கதைப்பதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இது.

இந்த சுவாரசியமான அனுபவம். வாழ்க்கையில் ஒரே யொரு முறை தோன்றும் உன்னதத் தருணம். பின்னொரு காலத்தில் நினைத்துச் சிரிக்கவும், சந்தோஷப்படவும் இந்த அனுபவம் கைகொடுக்கும்.

உங்களுக்கு இருக்கும் இதே சங்கடங்கள் உங்கள் மனைவிக்கும் இருக்கத்தான் செய்யும். முதலிரவில் நீங்களே பேச்சை ஆரம்பிக்கவேண்டும். அவரை உங் கள் மனைவியாக எண்ணியோ, உடலுறவை முன்னி றுத்தியோ பேச்சை ஆரம்பிப்பதுதான் சங்கடமாக இருக்கும்.

ஒரு தோழியாக நினைத்துப் பேசத் தொடங் குங்கள். ஒரு சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு வந்து விடுவீர்கள்.

அவரைப் பேசவைக்கும் கேள்விகளைக் கேளுங்கள். முக்கியமாக அவரது குடும்பத்தினர் பற்றியும், அவரது விருப்பு வெறுப்புகள் பற்றியும் கேளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்துவிடு(வீ)வார்.

அதை விட்டுவிட்டு உங்கள் வீர தீர பிரதாபங்களைப் பேசிக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சலித்துவிடும். உங்களது விருப்பு வெறுப்புகளை சுருக்கமாகச் சொல்லலாம்.

உங்கள் பேச்சு உங்களை அறியாமல் தானாகவே உறவு பற்றித் திசைதிரும்பும். ஒருகட்டத்தில் உறவுக்கான அவரது எதிர்பார்ப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியவரும். அதன் அடிப்படையில் உறவைத் தொடங்குவதா, இல் லையா என்று முடிவுசெய்யலாம்.

தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக நல்ல நேரம் பார்த்துத்தான் நீங்கள் தனியறையில் இருத்தப்படு கிறீர்கள். அதற்காக, திருமணம் முடிந்த நாள் இரவே அதை ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை.

திரு மண நாளன்று அதி காலை முதல் ஓய்வே இல்லாமல் இரவு விருந்துபசாரம் வரை நின்று கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் சூழல் மண மக்களுக்கு ஏற்படலாம். இதனால் ஏற்படும் களைப்பு உறவு குறித்து சிந்திக்கத் தடைபோடும். அப்படி யான நேரங்களில், பரஸ்பரம் ஒருவரது நிலை அறிந்து உறவைத் தொடங்குவதா, இல்லையா என்று முடிவு செய்யலாம். இருவரது எதிர்பார்ப்புகளும் தாம்பத்தியம் குறித்து இருந்தால் தாராளமாக ஆரம்பிக்கலாம் தாம்பத்தி யத்தை!

ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஒரு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும்போது சிறு சிறு தீண்டல்களால் இருவருமே உறவு நோக்கித் தள்ளப்படுவார்கள்.

முதலிரவில் ஆணுறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

வேண்டுமானால் கருத்தடை மாத்திரைகளை அந்த ஒரு மாதம் மட்டும் பயன்படுத்திவிட்டு பிறகு ஆணுறை யைத் தொடரலாம்.

திருமணத்தில் தாம்பத்தியத்தின் பங்கு அதிகம்.

ஆண் களுக்கு இருக்கும் அதே வேட்கை பெண்களுக்கும் இருக்கும். எனவே, தினந்தோறும் உறவு கொள்வதில் சிக்கல் இருக்காது உங்ளுக்கு..

ஆனால் மனைவியின் உடல் மொழியைக் கொண்டு அல்லது நேரடியாகவே அவரது கருத்தறிந்து உறவுகொள்வது நல்லது.

—————————————————–
கேள்வி: எனக்கு 28 வயது. அண்மையில்தான் திருமணம் ஆனது. நான் சிறு வயதில் சுய இன்பம் அனுபவிப்பேன்.

திருமணம் நடந்த இந்த ஒரு மாதத் தில் மனைவியுடன் உறவு கொள்ள முடியவில்லை.

இப்போதும் சுய இன்பத்திலேயே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எனது ஆணுறுப்பு சற்று வளைந்திருக்கி றது.

இதனால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமா?

பதில்: ஆணுறுப்பு வளைந்திருப்பதால் பாதிப்புகள் ஏதும் வருவதற்கில்லை.

உங்கள் மனைவியுடன் உறவு கொள்ளாத தால்தான் சுய இன்பத்தின் மீது உங்களுக்கு அதீத நாட்டம் தொடர்கிறது. அவருடன் உறவுகொள்ள முடியாததற்கு வேறு ஏதும் காரணம் இருக்கலாம்.

அதாவது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் மனைவியிடம் அழகு இல்லாமல் இருக்கலாம்.

தாம்பத்தியத்தை முழு இரவில் நடத்திப் பாருங்கள். உங்கள் பிரச்சினை பறந்தோடிவிடும்.
————————————————

கேள்வி: நான் 23 வயதுப் பெண். என் காதலருடன் முதல் தடவையாக முழுமையாக உறவுகொண்டேன். அப்போது எனது பிறப்புறுப்பில் வலி மிகுந்தாலும் இரத்தக் கசிவு இருக்கவில்லை. நான் சுய இன்பம் காண்பதும் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனது காதலரது பேச்சில் மாற்றங்களை உணர்கிறேன்.

இது என்னை மிகுந்த குழப்பத்துக்கு ஆளாக்குகிறது.

அவர் என்னைத் தவறாக நினைக்கிறாறோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் இதுவரை நான் யாருடனும் உறவுகொண்டதில்லை. இருந்தும் இந்த நிலைக்கு என்ன காரணம்?

பதில்: முதல்முறை உறவுகொள்ளும் எல்லாப் பெண்களும் இரத்தக்கசிவுக்கு முகங்கொடுப்பதில்லை.

அவர்களது கன்னித்திரை சற்று தடிப்பானதாக இருக்கலாம். இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவில் ஈடுபடும் போதுதான் இரத்தக்கசிவு தோன்றும்.

சிலரது அதீத உடலியல் செயற்பாடுகளால் அவர்களது கன்னித்திரை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கலாம்.

முழு மையான உறவாக நீங்கள் உணர்ந்தாலும், திருமணத்துக்கு முன்னரே உறவில் ஈடுபடும்போதான ஒரு பதட்டத்தினா லும் உறவு முழுமையாக இருந்திருக்காது. இதனாலும் இந்த நிலை தோன்றியிருக்கலாம்.

இரத்தக்கசிவை வைத்து தன் காதலியின் கற்பை எடைபோடுவது அசிங்கமான செயல்தான் என்றாலும், ‘அந்தரங்கம் அறிவோம்’ பகுதியில் கேட்கப்படும் பல கேள்விகள் அந்தச் செயலுக்கு நியாயம் கற்பிப்பதாக அமைகின்றன.

அதன்படி, அதாவது இன்றைய நிலையில் உங்கள் காதலரது மாற்றங்களை அவரால் நியாயப்படுத்த வும் முடியும்.

அதேநேரம், அவரது மாற்றம் பற்றியும் உங்கள் தரப்பு நியாயம் பற்றியும் வெளிப்படையாகப் பேசிவிடுவது நல்லது.

விரைவில் அவரைத் திருமணம் செய்துகொண்டு தாம் பத்தியத்தில் தொடர்ந்து ஈடுபடும்போது உங்களது புனிதத் தன்மையை அவர் உணர்ந்துகொள்வார்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்காகத்தான் காதல், கல் யாணம் என அனைத்துக்கும் ஒரு வயதெல்லையை நம் முன்னோர்கள் வகுத்துவைத்திருந்தனர்.

இதனால் அவர்களுக்கும் சரி, அவர்களது பிள்ளைகளுக்கும் சரி இதுபோன்ற சிக்கல்கள் பெரும்பாலும் ஏற்பட்டதில்லை.

Previous articleஉச்சா’ போற இடத்துல அரிப்பு, அலர்ஜி இருக்கா… இப்போ இதெல்லாம் சாப்பிடாதீங்க..
Next article‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது