Home பாலியல் பூப்படைதல் எப்படி நிகழ்கிறது? என்னென்ன அறிகுறிகள் தோன்றும்

பூப்படைதல் எப்படி நிகழ்கிறது? என்னென்ன அறிகுறிகள் தோன்றும்

59

Radhika-Apte-1024-X-728-Picsபூப்படைதல் என்பது பெண்மைக்கு அடையாளமாய் அமையும் ஒரு அற்புதமான இயற்கையான நிகழ்வாகும். இதற்கு பின் அவர்களின் உடல், மனரீதியில் பல்வேறான மாற்றங்கள் நிகழும்.

பூப்படைதல் எப்படி நிகழ்கிறது?

பூப்பெய்தலுக்கான மாற்றங்கள் கர்ப்பப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. மூளையில் இருந்து GNHR(Gonadotropin Releasing Hormone) என்ற ஹோர்மோன் சுரந்து அது மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி(Pitutary) என்ற சுரப்பியை தூண்டி விடுகிறது

இந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் FSH(Follicular Stimulating Hormone) என்கின்ற சினைவளர்ப்பு ஹோர்மோனை நேரடியாக இரத்தத்தினுள் சுரந்து விடுகிறது.

இந்த ஹோர்மோன் திசுவைவைத் தூண்டியதும், உடனே அது, ஈஸ்டிரஜன் (Estrogen) என்கின்ற இன்னொரு ஹோர்மோனை உற்பத்தி செய்கிறது.

இந்த ஈஸ்டிரஜன் கர்ப்பப்பையில், சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் ஜி.என்.ஆர்.ஹெச் (GNHR) ஹோர்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்.

இவ்வாறு நிகழ்வுகள் நடக்கும் போது தான் உதிரப்போக்கு ஏற்படத் தொடங்குகிறது, இந்நிகழ்வையே பூப்படைதல் என்கிறோம்.

இந்நிகழ்வானது பெண்களுக்கு பொதுவாக 10 முதல் 14 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பூப்படைதலிக்கான அறிகுறிகள்

பெண்கள் பூப்படைவதற்கான முதல் அடையாளம் மார்பகங்கள் வளர்வது.
பிறப்புறுப்பு மற்றும் அக்குள்களில் முடி வளரத் தொடங்கும்.
சில பெண்களுக்கு முகப்பருக்கள் தோன்றக்கூடும்.
பூப்படையும் காலகட்டத்தில் பெண்களின் இடுப்புப் பகுதி அகன்றும், மெலிந்தும் தோற்றமளிக்கும்.
உதிரப்போக்கு வரத் தொடங்கும்.
மேலும் ஒரு சில பெண்கள் 7 முதல் 8 வயதில் கூட பூப்பெய்தலாம் இந்த நிலையை Precocious Puberty என்று சொல்வார்கள்.

இன்றைய கால உணவுப் பழக்கவழக்கங்கள், சிறுவயது மன அழுத்தமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

7 வயதிற்கு முன்பாகவோ அல்லது 14 வயதிற்கு மேற்பட்டோ பூப்படைந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.