Home பாலியல் ‘செக்ஸ்’ வாழ்க்கைக்கு ‘செல்ப் கான்ஃபிடன்ஸ்’ அவசியம்!

‘செக்ஸ்’ வாழ்க்கைக்கு ‘செல்ப் கான்ஃபிடன்ஸ்’ அவசியம்!

26

செக்ஸ் என்பது மனித வாழ்வில் கணவன் மனைவி இடையே பல வகையில், இணக்கத்தை ஏற்படுத்துகிறது. சீரான வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது. உடல் ஆரோகியத்துக்கும், மன வலிமைக்கும் உதவுகிறது. மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

ஒரு குறிப்பிட்ட வயசானாலே இனிமேல் எதுக்கு அதெல்லாம் என்ற எண்ணம் வந்துவிடும். ஆனால் தன்னம்பிக்கையோடு அணுகினால் எந்த வயதிலும் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நாற்பது வயதுக்கு மேல் ஆனாலே தம்பதியர்களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரித்து விடும். வீட்டில் குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள். விபரம் தெரிந்த பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதாலேயே தம்பதியர் தங்களின் ஆர்வத்திற்கு அணை போட ஆரம்பித்து விடுவார்கள். அதுமாதிரியான தவறினை ஒருபோதும் செய்யவேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரை. எந்த வயதிலும் தன்னம்பிக்கையோடு தாம்பாத்ய வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பது அவர்களின் அறிவுறுத்தலாகும்.

தினசரி புத்துணர்ச்சியோடு வாழ்க்கையை தொடங்குங்கள். நீங்கள் அணியும் உடை ஸ்பெசலாக இருக்கட்டும் அப்பொழுதுதான் நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் அணியும் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்களின் இளமையை அதிகரித்துக் காட்டும். பெரும்பாலான பெண்கள் தங்களின் உள்ளாடை அளவை கூட தெரியாமல் இருக்கின்றனர்.

தினசரி உங்கள் காதலை கணவரிடம் தெரிவியுங்கள். அதுவே உங்களை உற்சாகப்படுத்தும். தாம்பத்ய வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அதிகரிக்குமாம். நாற்பது வயதிற்கு மேல் பார்வை மங்குவது இயல்பானதுதான் அதற்காக முகத்திற்கு பொருத்தமில்லாத கண்ணாடியை அணியவேண்டும் என்பதில்லை உங்கள் அழகினை அதிகரிக்கும் கண்ணாடியை பொருத்தமாக அணியுங்கள்.

உடம்பில் உள்ள தேவையற்ற முடிகளை வேக்ஸிங் மூலம் அகற்றுங்கள். பெடிக்யூர், மெனிக்யூர் மூலம் கை கால்களை சுத்தம் செய்யலாம். சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் முறைகளை கையாளலாம். அதனால் உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் மாதம் இரண்டு முறையாமவது தாம்பத்ய உறவில் ஈடுபடவேண்டும் ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் செக்ஸ் மன அழுத்தம் போக்கும் மருந்தாக செயல்படுகிறதாம்.

வேலை அதிகம் இருக்கிறதே என்று எப்பொழுது பார்த்தாலும் சோர்வாக இருக்காமல் கொஞ்சம் உடற்பயிற்சி செய்து சோர்வை போக்குங்கள். ஒரு முக்கியமான விசயம் எப்பொழுதும் புன்னகையுடன் இருங்கள் அதிலேயே உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்குமாம்.