Home ஆண்கள் ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?

ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?

28

Captureஎனக்கு ஆணுறுப்பிலே பங்கஸ் தொற்று இருப்பதாக உணர்கிறேன். எனது ஆணுறுப்பிலிருந்து வெள்ளை நிரவத் திரவம் வெளியேறுவதுடன் எப்போதாவது அரிப்பும் உள்ளது?
பதில்: உங்களுக்கு பூஞ்சை தொற்று இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகள் ஆனால் பங்கஸ் இளம் வயதினரை எளிதாக தாக்கி நோயினை ஏற்படுத்தாது. அது வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் , மற்றும் வேறு நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களிலேயே நோயினை ஏற்படுத்தும். மேலும் பங்கஸினால் துர்நாற்றம் ஏற்படுவதுமில்லை.
பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் துர்நாற்றம் ஏற்படலாம்.
எல்லாவிதமான பக்டீரியா தொற்றிற்கும் சிகிச்சை உண்டு.

நீங்கள் உங்கள் ஆணுறுப்பிலே காயங்கள் அல்லது புண் மற்றும் வலி உள்ளதா என்று தெரிவிக்காததால் என்னால் எதுவும் உறுதியாக கூற முடியவில்லை.
ஆனாலும் நீங்கள் இது காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசியுங்கள்.
அப்படி உங்களுக்குத் தொற்று இருந்தாலும் சில வாரங்களிலே அவை குணப்படுத்தப்பட்டு நீங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.
கூச்சப்படாமல் ஒரு மருத்துவரை ஆலோசிக்கவும்.
உங்களுக்கு பூஞ்சை தொற்றுக்கள் இருப்பின் அவை உங்கள் துணைக்கும் தொற்றிக் கொள்ளலாம்.
எனவே உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அவசியம் மருத்துவரிடம் செல்லுங்கள்..