Home சூடான செய்திகள் தாம்பத்திய கட்டிலில் இன்பம் சிறக்க இதை சாப்பிடுங்க

தாம்பத்திய கட்டிலில் இன்பம் சிறக்க இதை சாப்பிடுங்க

201

அந்தரங்கம்:மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்றொரு பழமொழி உண்டு. இதற்கு உலர் திராட்சை றந்த உதாரணமாக கூறலாம். அளவில் சிறதாக உள்ள இந்த உலர் திராட்சை மனித உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இதன் பயன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

உலர் திராட்சையின் பயன்கள்
நொறுக்கு தீனிகள் பட்டியலில் கண்டிப்பாக உலர் திராட்சை சேர்க்கப்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்துடனும், முதுமையற்ற தோற்றத்துடன் இருப்பதற்கான ரகசியம் உலர் திராட்சையில் அடங்கியுள்ளது. உலர் திராட்சைகள் உருவத்தில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், சக்தியில் மிகப் பெரியதாக உள்ளது.

இதில் நார் சத்து, தாதுக்கள், வைட்டமிட்ன்ஸ்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளது. அளவோடு சாப்பிட்டால் இது அதிக பலன்களை அளிக்க கூடியது. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் உலர் திராட்சையின் பயன்களை இங்கே காண்போம்.

1. செரிமானம் மேம்படும் உலர் திராட்சையை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் தண்ணீரில் போட்டவுடன் பெரியதாக விரிவடையும். இதில் உள்ள மலமிளக்கி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும். தினமும் உலர் திராட்சை சாப்பிட்டால் குடல் அசைவுகள் சீராக இருக்கும். உலர் திராட்சையில் உள்ள நார் சத்தானது உடலின் நச்சு மற்றும் கழிவுகளை வெளியேற்றும்.

2. அசிடிட்டி குறையும் உலர் திராட்சையில் நல்ல நிலையில் அடங்கியுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அசிடிட்டியை குறைக்க பெரிய அளவில் உதவி செய்யும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றும். சிறுநீரக பிரச்னை, இதய நோய்கள், மூட்டு வீக்கம், முடக்கு வாதம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

3 ரத்த சோகைக்கு தீர்வு இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொண்டால் ரத்த சோகை குணமாகும். இந்த சத்துக்கள் உலர் திராட்சையில் நிறைந்து காணப்படுகிறது. ரத்ததில் சிகப்பு அணுக்களை உற்பத்தி செய்வதை இதில் உள்ள காப்பர் அதிகரிக்கும்.

4. புற்று நோய் அபாயம் குறையும் உலர் திராட்சையில் கேட்சிங் என்ற ஆக்ஸிடன்ட் எதிர்ப்பான் அதிகளவில் உள்ளது. இது கதிர் வீச்சு தாக்குதலில் இருந்து உடலை காக்க கூடியதாகும். இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கட்டிகள் வர விடாமல் தடுக்கும்.

5. நோய் தொற்றுக்களை குணமாக்கும் உலர் திராட்சையில் பாலிபினோலிக், பைதோநியூட்ரியன்ட்ஸ் போன்ற ஆக்ஸிடன் எதிர்ப்பான் நிறை ந்துள்ளது. இவை இருப்பதன் காரணமாக காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுவிடும். பேக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும். சளி போன்று அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபட விரும்பினால் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உலர் திராட்சையை உட்கொள்ள வேண்டும்.

6. செக்ஸ் பலவீணம் குறையும் உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கை இனிக்கச் செய்யும். உலர் திராட்சையில் அர்ஜின்னி என்ற அமினோ ஆசிட் உள்ளது. இது லிபிடோவை அதிகரிக்கச் செய்து உணர்ச்சியை தூண்டும். ஆண்களுக்கு ஏற்படும் கருவுறுதல் பிரச்னைக்கும், விறைப்பு தன்மை இல்லாமைக்கும் இது சிறந்த தீர்வா கும். ஒட்டுமொத்த ஒற்றுமை வாழக்கையும் மேம்படுவதற்கு உலர் திராட்சை உதவுகிறது. ஒவ்வொருவரின் உடலுக்கும் இது சக்தியை ஏற்படுத்தும் வேலையை செய்யும். வயதானவர்களுக்கு, புதிய தம்பதிகளுக்கும் உலர் திராட்சை மதிப்புமிக்க பயனை அளிக்கும். குங்குமப்பூ மற்றும் உலர திராட்சையை கொதிக்கவைக்கப்பட்ட பாலில் கலந்து சாப்பிடலாம்.

7.கண்களுக்கு நல்லது உலர் திராட்சையில் உள்ள ஆக்ஸிடன் எதிர்ப்பான்கள் கண் பார்வைக்கு வலுசேர்க்கும். கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். கதிர்வீச்சு தாக்குதலால் தசை வளர்தல், கேட்டராக்ட் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் வைட்டமின் ஏ, ஏ&காரோடெனாய்டு, பேட்டாகாரோடெனி ஆகிய சத்துக்கள் அடங்கிய உலர் திராட்சை இதற்கு நிச்சயம் பலனளிக்கும்.

8. வாய், பல் பராமரிப்பு உலர் திராட்சையில் ஒலினோலிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள பைத்தோகெமிக்கல் பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் ஏற்படுவதில் இருந்து பற்களை பாதுகாக்கும். உடையக் கூடிய பற்களையும் பாதுகாக்கும். அதோடு பற்கள் சிறந்த வடிவத்துடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு உலர் திராட்சை கட்டாயம் சாப்பிட வேண்டும். வாயில் பேக்டீரியாக்கள் வளர்வதை உலர் திராட்சை கட்டுப்படுத்தும். இதில் உள்ள கால்சியம் பற்கள் உடைவதை தடுக்கும். வாயில் கிருமிகள் உருவாவதை குறைக்கும்.

9. உடல் எடை பராமரிப்பு மெலிந்த உடலை கொண்டு உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் ஆரோக்கியமான வழியில் எடை அதிகரிப்பதை காணமுடியும். இதில் அதிக குளுக்கோஸ் மற்றும் ஃப்ருக்டோஸ் உள்ளது. இது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும். கொழுப்பு இல்லாத உடல் எடை அதிகரிப்புக்கு உலர் திராட்சை முக்கிய பங்காற்றும். 10. எலும்புக்கு வலுவூட்டும் உலர் திராட்சையில் உள்ள அதிக கால்சியம் மூட்டு வீக்கம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதை தடுத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

11. தோல் தோலில் உள்ள செல்களை பாதுகாக்கும் திறன் உலர் திராட்சைகளுக்கு உண்டு. உள்புற காரணங்களால் ஏற்படும் செல்கள் அழிவை இது கட்டுப்படுத்தும். தோல் சுருக்கம், மடிப்பு, முதுமை தோற்றம் போன்றவை ஏற்படுவதை தாமதப்படுத்தும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு.

12. உடல் கழிவை வெளியேற்றும் ரத்த நச்சு காரணமாக உடலில அசிடிட்டி உருவாகும். உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம், மெ க்னீசியம் வயிற்று அமிலத்தை சீராக்கும்.

13. கூந்தல் வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்பு, ஆகஸிடன்ஸ் எதிர்ப்பான் போன்றவை கூந்தலுக்கு நன்மை விளைவிக்க கூடியது. இவை அனைத்தும் உலர் திராட்சையில் இடம்பெற்றுள்ளது. மேலும் கூந்தலின் தரத்தையும் உயர்த்தும். இயற்கையான நிறம் கிடைக்க உதவிகரமாக இருக்கும். இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது கூந்தலுக்கு ஊட்டமும், கனிமங்களையும் வழங்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சிறிய அளவில் உள்ள உலர் திராட்சையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதனால் உலர் திராட்சை தினமும் சாப்பிட தவற வேண்டாம்