Home பெண்கள் உடல் கட்டுப்பாடு Health உடல்எடையை வேகமாகக் குறைக்கும் எட்டு பழங்கள்

Health உடல்எடையை வேகமாகக் குறைக்கும் எட்டு பழங்கள்

25

இயற்கை நமக்கு அளித்த கொடை தான் பழங்களும் காய்கறிகளும். அதையெல்லாம் விட்டுவிட்டு, நாகரிகம் என்ற பெயரிலும் நம்முடைய வசதிக்காக, பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் பிற துரித உணவுகளையும் சாப்பிட்டு, உடல்பருமனால் அவதிப்படுகிறோம்.

சில பழங்களைச் சாப்பிடுவதால் உடல் பருமன் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னென்ன பழங்கள்…

அவகேடா

அவகேடா அதிக அளவிலா நார்ச்சத்துடைய பழங்களுள் ஒன்று. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும் ஃபோலிக் அமிலமும் உடலின் இயக்கத்தை சீராக்குகிறது. அதோடு, டெஸ்ட்ரஜோன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அவகேடாவை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருபவர்கள் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிள் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஒரு ஆப்பிள் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். அதனால்,தேவையில்லாமல் சாப்பிடும் அதிகப்படியான உணவுகளைத் தவிர்க்க முடியும்.

வாட்டர்மெலன்

வாட்டர்மெலன் உடலைக் குளிர்விக்கிறது. உடலிலுள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினைக் கொடுக்கிறது. குறிப்பாக, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் கலோரியின் அளவு மிக மிக குறைவு.

பேரிக்காய்

அதிக அளவு நார்ச்சத்துடைய பேரிக்காய் உடல் சருமத்தையும் மெருகூட்டுகிறது. செரித்தல் தன்மையை அதிகப்படுத்துவதால், உடலில் உள்ள தேவையில்லாத மாசுக்களை நீக்குகிறது. இதனாலேயே தேவையில்லா கொழுப்புகளும் கரைகின்றன.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் சிட்ரின் அமிலம் உள்ளது. அவை அதிக அளவிலான நார்ச்சத்துகளை உடலுக்கு வழங்குவதால் செரித்தலைத் துரிதப்படுத்துவதோடு உடல் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது.

மாதுளை

மாதுளை ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் மாதுளைக்கு சிறந்த இடமுண்டு. அதனால், உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளும் கரைக்கப்படுகின்றன.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. பப்பாளிய்ல் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், உடலில் தேவையில்லாத கழிவுகளை அகற்றுவதோடு, உடலில் ரத்தத்தின் அளவையும் சீராக்குகிறது.

ஆரஞ்சு

வைட்டமின் சி நிரம்பியது ஆரஞ்சு. இதிலுள்ள சிட்ரஸ் அமிலம், உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உடலில் தேங்கும் தேவையில்லாத கொழுப்புகளை நீக்குவதோடு, அதிகப்படியான கலோரிகளையும் எரிக்கிறது.