Home பெண்கள் அழகு குறிப்பு சுருட்டை முடியை பராமரிக்க டிப்ஸ்

சுருட்டை முடியை பராமரிக்க டிப்ஸ்

31

28-1390890578-4-conditioningசுருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாக கையாள முடியாது. ஏனெனில் அவர்களின் முடிகள் அடர்த்தியாக காணப்பட்டாலும், முடிகளின் நுனிகளில் பிளவுகள் அதிகமாக ஏற்பட்டு, வேகமாக வறண்டு, அடிக்கடி சிக்கல் விழும்.

இதன் காரணமாக எந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராமல் இருக்கும். பார்ட்டிகள் அல்லது விழாவிற்கு செல்லும் போது சுருள் முடியானது நம் கைகளுக்கு அடங்காமல் இருக்கும்.

சுருள் முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

சுருள் முடி உள்ளவர்கள் தங்கள் கூந்தலுக்கு பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.

தினமும் தலைக்கு குளிப்பதால், முடிகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சுருள் முடி உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது.

அடர்த்தியாக இருக்கும் சுருள் முடியானது, தலைக்கு அலங்காரம் செய்யும் போது, கைகளுக்கு பிடிபடாமல் இருக்கும். இதனால் முடிகளுக்கு அலங்காரம் செய்வதற்கு முன் சிலிக்கான் சீரம் தலையில் தடவினால், கூந்தல் அடங்கி நீளமாகவும் தெரியும்.