Home காமசூத்ரா உங்களை தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதை மறக்காமல் இருங்கள்

உங்களை தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதை மறக்காமல் இருங்கள்

229

தாம்பத்தியம் சுவைக்க:திருமணம் என்றாலே இரண்டு மனங்கள் ஒத்துப் போகின்ற வாழ்க்கை என்று கூறுவார்கள். ஒரு இளவரசன் ஒரு இளவரசியை திருமணம் செய்து கொண்டு எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்தார் என்பது படிக்கும் கதைகளில் வேண்டும் என்றால் நிஜமாகலாம். ஆனால் உண்மையில் இரு மனங்களை சந்தோஷமாக நீண்ட தூரம் எடுத்துச் செல்வது என்பது நிறைய கஷ்டங்கள் நிறைந்தது

ஏனெனில் எல்லாரும் நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் தான் வாழ்க்கையில் தங்கள் அடியையே எடுத்து வைக்கின்றனர். அந்த எதிர்ப்பார்ப்புகள் பொய்யாகும் போது மனக் கசப்புகளும் உறவில் விரிசலும் ஏற்பட ஆரம்பிக்கிறது.

அப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை பற்றியும் அதனால் திருமண உறவில் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

சந்தோஷம் முதலில் திருமணம் என்பது வாழ்க்கை முழுவதும் சந்தோஷத்தை மட்டுமே அளிக்கின்ற ஒரு பந்தம் என்று நினைக்கிறோம். ஆனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் எல்லா நாளும் நமக்கு சரியாக அமையாது, எல்லா நாளும் சந்தோஷமான ஸ்பெஷல் ஆன நாளாக இருக்காது. நாம் எல்லாரும் ஆண், பெண் என்பதற்கு முன்னால் நாம் எல்லாரும் மனிதர்கள் என்பதை உணர வேண்டும். வாழ்க்கை என்றால் சந்தோஷம் கஷ்டம் என்ற இரண்டும் சேர்ந்து தான் வரும். எல்லாரும் திருமண வாழ்வில் சந்தோஷமான திசையை நோக்கியே இருக்க நினைக்கிறோம். powered by Rubicon Project இதனால் கஷ்டங்கள் வரும் போது துவண்டு மன அழுத்தத்தில் விழ நேரிடுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை விட்டொழியுங்கள். திருமண உறவில் சந்தோஷம் வரும் போது முழுவதுமாக அனுபவியுங்கள். கஷ்டம் வரும் போது சங்கடப்படாமல் அனுசரிக்க பழகுங்கள். உங்களால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் மன நல மருத்துவரின் உதவியை கூட நீங்கள் நாடலாம். இது உங்களுக்கு நல்ல நிம்மதியை கொடுக்கும்.

மாற்றங்கள் திருமணம் செய்த உடனே நாம் செய்யும் முதல் காரியம் நம் துணையை மாற்றியமைக்க முயல்வது. இப்பொழுது உங்கள் துணையாக இருப்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் நண்பனாக இருந்திருக்கலாம், அப்பொழுதுள்ள அவர் பழக்க வழக்கங்கள் நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆனால் அதே நபர் நமக்கு துணையாக வரும் போது அவருடைய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இந்த எதிர்ப்பார்ப்பு திருமண உறவில் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. பல ஆண்டுகள் தொடர்புடைய ஒருவருடைய ஆளுமையை நம்மால் மாற்ற இயலாது. ஒருவரை அவராக ஏற்றுக் கொள்வது தான் சிறந்தது. எனவே மாற்ற வேண்டும் என்ற தேவையில்லாத எதிர்ப்பார்ப்பை விட்டொழியுங்கள்.

நினைவுகள் நினைவுகள் என்று வரும் போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசங்கள் தென்படுகிறது. அதாவது பெண்களால் உணர்வுப் பூர்வமான விஷயங்களை எளிதாக நினைவாக்க முடிகிறது. ஆனால் ஆணால் அப்படி செய்ய இயலவில்லை. இது இயற்கையாகவே உள்ள ஒரு பிரச்சினை. பெண்கள் உணர்வுப் பூர்வமானவர்கள் என்றால் ஆண்கள் பிராக்டிகல் ஆனவர்கள் என்றே கூறலாம். உங்கள் கணவர் திருமண நாளையோ அல்லது உங்கள் பிறந்த நாளையோ மறந்து விட்டால் வருத்தப்படாதீர்கள், சண்டை போடாதீர்கள். அது அவர் வேண்டும் என்று செய்வதில்லை. நீங்களும் உங்கள் மனைவியின் பிறந்த நாளை ஞாபகம் வைக்கும் விதத்தில் காலண்டரில் குறித்து வைப்பது, ரிமைண்டர் போட்டு வைப்பது போன்றவற்றை கொண்டு மறக்காமல் கொண்டாடி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்தலாமே.

இதனால் இருவரும் சந்தோஷமாக இருப்பதோடு உறவும் நீடிக்கும். அதே மாதிரி அந்த நாளில் உங்கள் உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்று.

கவனித்தல் ஒரு ஆணுக்கு ” பிரச்சினைகளை சரி செய்யும்” குணாதிசயம் இருக்கும். இதுவே பெண்களுக்கு பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டால் போதும் என்று தோன்றும். எனவே உங்கள் மனைவி உங்களிடம் பிரச்சினைகளை கூறும் போது அதை சரி செய்யும் விதத்தில் முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் கவனமாக கேட்டுக் கொள்வதே அவர்களுக்கு போதுமான தாக இருக்கும். எனவே தினமும் இருவரும் அமர்ந்து உட்கார்ந்து இரண்டு பேரும் மனம் விட்டு பேசிப் பழகுங்கள். இது உங்களுக்கிடையே உள்ள புரிதலை அதிகப்படுத்தும். இதனால் உறவில் விரிசல் ஏற்படாது.

சமநிலை தற்போதைய கால கட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்று வந்தாகிவிட்டது. திருமண உறவிலும் ஆணும் பெண்ணும் சமமாக இருக்க முற்படுகிறார்கள். எனவே குடும்ப பொறுப்புகளை வேலைகளை ஒருவர் பக்கமே சாய்க்காமல் இருவரும் சமமாக பிரித்து செய்யலாம். இதனால் நேரம் மிச்சமாகுவதோடு மன அழுத்தம், வேலைப்பளு இருவருக்குமே குறையும். வேலையை ஒரு பட்டியல் இட்டு இருவரும் சமமாக பிரித்து செயல்படலாம். உங்கள் துணைக்கு உங்கள் உதவி தேவைப்படும் நேரம் உதவலாம். இது உங்கள் இருவருக்கிடையே நட்பு பாலத்தை ஏற்படுத்தும்.

மாமியார் பிரச்சினை உங்களுக்கு உங்கள் மாமியாரை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கண்டிப்பாக அவருக்கு நீங்கள் மரியாதை அளிக்க வேண்டும். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அவர் இல்லாவிட்டால் உங்களுக்கு இப்படி ஒரு அன்பான கணவர் / மனைவி கிடைத்திருக்க மாட்டார். இந்த மாதிரி ஒரு குடும்பம் உங்களுக்கு கிடைத்திருக்காது அல்லவா. எனவே பொறாமைபடுவதை விடுத்து அன்பாக இருக்க பழகுங்கள். உங்களுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனையை உங்கள் துணையிடம் அமர்ந்து பேசி சரி செய்யுங்கள். வீணான சண்டைகளை தவிருங்கள். அவர் உங்களை குறை கூறி இருந்தாலும் அதற்கு உங்கள் கணவரிடம் தீர்வு தேடாதீர்கள். உங்கள் மன ஆறுதலுக்கு சொல்லவும் விட்டுக் கொடுத்து போகவும் பழகுங்கள். நீங்கள் உங்கள் துணையின் பொற்றோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் போது உங்கள் கணவரும் / மனைவியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். இதனால் உங்களுக்கிடையே வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கலாம். மனதில் வைத்துக் கொள்ளுங்கள் நாளைக்கு உங்கள் குழந்தையும் திருமணமாகி இதே தவறுகளை செய்யும் போது நம் மனதும் உடையும் என்பதை மறவாதீர்கள்

விருப்பம் நீங்கள் ஆர்வமாக இருக்கும் விஷயத்திற்கு உங்கள் துணையும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஒன்றாக நீங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக அவருக்கு வீடியோ கேம் பிடிக்கும் என்றால் நீங்கள் யோகா செய்யலாம். இருவரும் ஒன்றாக விருப்பப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்க வேண்டாம். அவ்வப்போது நீங்கள் இல்லாததை உணர அவருக்கு

அது உங்களை பற்றிய நினைவை அவருக்கு கொடுக்கும். கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிக் கொள்ளுங்கள். இது நீங்கள் உற்சாகமாக செயல்பட உதவும். திருமண உறவில் முடிந்த வரை போதுமான நேரத்தை செலவழியுங்கள். இது உங்களுக்கிடையே உள்ள புரிதலை உண்டாக்கி வாழ்க்கையை இன்பமாக்கும் என்று அவர் கூறுகிறார்.