Home சூடான செய்திகள் உங்கள் கட்டில் உறவை ஆரோக்கியமக்க இதை கடைபிடியுங்கள்

உங்கள் கட்டில் உறவை ஆரோக்கியமக்க இதை கடைபிடியுங்கள்

70

சூடான செய்திகள்:கலவுதல் அதாவது உடலுறவு கொள்தல் என்பது தான் மனித இனப்பெருக்கத்தின் ஆதாரம்; மனிதர்களை ஒரு அமைப்புக்குள் இணைத்து வைக்க உதவும் ஒரு நல்ல யுக்தி. இந்த யுக்தியை நல்ல முறையில் மேற்கொண்டால் ஆரோக்கியத்துடன் அருமையான வாழ்வை மேற்கொள்ளலாம்; இதே யுக்தியை கேடு கெட்ட முறையில் மேற்கொண்டால், அது உயிரைக் கொல்லக்கூடிய பாலியல் நோய்களை மனிதர்களுக்கு பரிசாக தரும்.
உடலுறவு கொள்வது என்பதும் ஒரு கலை தான்; ஆணும் பெண்ணும் ஒன்றாக சங்கமிக்கும் அந்த நிகழ்வு தான் கலவி என்று கூறப்படுகிறது. உடலுறவு எனும் கலையை சிறப்பாக புரிய கலையை முழுதாக அறிந்து வைத்திருப்பதுடன், அதை செயல்படுத்த போதுமான அளவு ஆரோக்கியமும் இதில் அவசியம் தேவை. எனவே உடலுறவு கலையை செம்மையாக நிகழ்த்த எப்படி கலவி ஆரோக்கியத்தை பெறுவது என்று இந்த பதிப்பில் படிக்கலாம்.

கலவி ஆரோக்கியம் முக்கியமா?
கலவி இதில் உடலின் செயல்பாடும் உணர்வுகளின் வெளிப்பாடும் தான் மிகவும் அதிகம்; உடல் சரியாக இயங்க ஆரோக்கியம் அவசியம் என்று கூறுகிறோம்; அதே போல் உடலுறவில் உடல்கள் சரியாக சங்கமித்து இன்பக்கடலில் மூழ்க கண்டிப்பாக உடலின் உடலுறவு ஆரோக்கியம் மிகவும் அவசியம். உடலுக்கு எப்படி உணவின் மூலமும் உடற்பயிற்சிகளின் மூலமும் பலம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கிறதோ, உடல் இயக்கத்தின் ஒரு அங்கமான உடலுறவு சரியாக நடக்கவும் உடைவு மற்றும் பழக்க வழக்கங்கள் தான் உதவும்.

யாருக்கு அவசியம்?
எவரால் சரியாக உடலுறவில் ஈடுபட முடியவில்லையோ, ஆண்மைக் குறைபாடு, உடலுறவில் விருப்பமின்மை, உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் உடலின் உடலுறவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் கண்டிப்பாக இறங்க வேண்டும். உடலுறவு ஆரோக்கியத்தை சரியாய் மேம்படுத்தினால், கண்டிப்பாக உச்ச கட்ட இன்பத்தின் உச்சத்தை அடையலாம்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா எனும் ஆயுர்வேத மூலிகை கலவி ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. இந்த மூலிகையை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் ஆண்களில் விந்துக்களின் எண்ணிக்கை, விந்துகளின் அளவு மாற்றம் அவற்றின் ஆரோக்கியம் போன்றவை மேம்படும். பெண்கள் இதனை பயன்படுத்துவதால், உடலுறவில் பிறப்புறுப்பில் ஈரம் ஏற்படுத்தும் தளர்த்தியாகவும், உடலுறவு உறுப்புகளை பலப்படுத்தவும் உதவும்.

உடற்பயிற்சி மற்றும் யோகா! உடலிலோ உடலின் உணர்விலோ எந்தவொரு குறைபாடு இருந்தாலும் அதை சரி செய்ய நமது பாரம்பரிய யோகா மற்றும் உடற்பயிற்சி முறைகளில் கண்டிப்பாக ஒரு வழி இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருந்தால் கண்டிப்பாக உடலுறவு கொள்வதில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, தினசரி தகுந்த மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சிகளை மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் உடலுறவு ஆரோக்கியத்தையும் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்!

எண்ணெய்கள் உடலில் காயமோ அல்லது ஏதேனும் மாறுபாடோ ஏற்பட்டால் உடனே தேங்காய் எண்ணெயை தேய்ப்பார்கள்; இதையே வழிவழியாக நாம் பயன்படுத்தி பின்பற்றி வருகிறோம். காயத்திற்கு அல்லோபதி மருந்து தேடும் முன் நம் கை தானாய் தேடுவது தேங்காய எண்ணெயை தான். சில சமயங்களில் ஏதேனும் சுளுக்கு போன்றவை ஏற்பட்டு விட்டால், உடலில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்ய விளக்கெண்ணெயை பயன்படுத்துவர்.

எண்ணெய்களின் பயன்கள்! இந்த இரண்டு எண்ணெய்களும், அதாவது தேங்காய் மற்றும் விளக்கெண்ணெய் இந்த இரண்டும் உடல் பாகங்களுக்கு நன்மை புரிவது போல், உடலுறவு ஆரோக்கியத்திற்கும் அதிகம் நன்மை புரிகிறது. இந்த எண்ணெய்களை பிறப்புறுப்பில் தூங்கும் முன்னர் தடவுவது, ஈஸ்ட் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் மற்ற உடல் உறுப்புகளுக்கு எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வது போல, பிறப்புறுப்பு மற்றும் உடலுறவில் ஈடுபடும் உறுப்புகளுக்கும் மசாஜ் செய்தல், அது அவ்வுறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

இரும்புச்சத்து என்னதான் பெண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகமாக இருந்தாலும், அவற்றை நன்கு தூண்டி விட்டு மேலெழுப்ப ஒரு உந்துகோல் தேவை; மேலும் பெண்களின் தேகம் மிருதுத்தன்மை கொண்டு, சற்று பழத்தில் பின்தங்கி இருப்பதால், அவர்கள் தங்கள் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க முயல வேண்டும்; இது உடலை பலப்படுத்துவதகோடு, உடலுறவு செயல்பாடுகளையும், ஆரோக்கியத்தையும் பலப்படுத்த பெரிதும் உதவும்.

அக்குபங்சர் அக்குபங்சர் எனும் மருத்துவ முறை உடலுறவு ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. உடல் உறுப்புகளில் அழுத்தம் கொடுத்து, அவற்றை சரியாக இயக்கி, உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்க இந்த மருத்துவ முறை உதவுகிறது. அது போல், உடலுறவு உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளை போக்க, உடலுறவு உறுப்புகளின் உணர்ச்சிகளை தூண்டிட இந்த முறை மிகவும் உதவுகிறது.

தவிர்க்க வேண்டியவை! உடலின் கலவி ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் ஆண்களும் பெண்களும் தங்கள் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உப்பு மற்றும் காபின் அளவை நன்கு குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த இரண்டும் உடலில் அதிகம் இருந்தால், அவை பலவித உடல் குறைபாடுகளை ஏற்படுத்துவது போல உடலுறவில் கூட குறைபாட்டை ஏற்படுத்தலாம். எனவே, இவற்றை மிக குறைந்த அளவில் பயன்படுத்தி, அதிக பலன்களை உடல் நலத்திலும், உடலுறவு இன்பத்திலும் காணுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்!