Home பெண்கள் அழகு குறிப்பு முடி உதிராமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது எப்படி?

முடி உதிராமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது எப்படி?

20

captureதற்போது யாருக்கு தான் தலைமுடியை இயற்கையாக காய வைப்பதற்கு நேரம் இருக்கிறது. அனைவரது வீட்டிலும் ஹேர் ட்ரையர் உள்ளது. அதே சமயம் பலரும் ஹேர் ட்ரையர் தலைமுடியை அதிகம் உதிரச் செய்யும் என்று சொல்வதால், அதைப் பயன்படுத்த அஞ்சுகிறார்கள்.

ஆனால் தலைமுடி உதிர்வதற்கு நாம் அதைத் தவறாக பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். நமது எந்த தவறான செயல்கள் ஹேர் ட்ரையரால் தலைமுடியை உதிரச் செய்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேர் ட்ரையரின் நுனிப்பகுதி மிகவும் முக்கியமானது என்று தெரியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் அதை நீக்கிவிடுகின்றனர். ஏனெனில் அதிலிருந்து வெளிவரும் சூடான காற்றினை அளவை மிதமாக வெளிவிடுவதால் தான். ஆனால் அது தான் தலைமுடிக்கு நல்லது. இல்லாவிட்டால், மிகுந்த சூடான காற்று தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதித்து, தலைமுடியை வறட்சியடையச் செய்வதோடு, தலைமுடியை உதிரச் செய்யும்.

அதிக சூட்டில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது. எப்போதும் ஹேர் ட்ரையரை குறைவான வெப்பத்தில் தான் பயன்படுத்த வேண்டும். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

தலைமுடியில் இருந்து தண்ணீர் சொட்டசொட்ட ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது தலைமுடிக்கு நீங்கள் செய்யும் கேடுகளில் ஒன்று. எப்போதும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தும் முன், துணியால் தலைமுடியைத் துடைத்துவிட்டு, பின்பு தான் பயன்படுத்த வேண்டும்.

நேரமாகிவிட்டது என்று அரைகுறையாக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தாமல், முழு ஈரமும் போகும் வரை ஹேர் ட்ரையரைப் பயன்படுத்த வேண்டும்.

ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது, பிளாஸ்டிக் அல்லது மெட்டல் சீப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தலைமுடி அதிக வெப்பத்தால் கருகும் வாய்ப்புள்ளது. எனவே மென்மையான முட்களைக் கொண்ட சீப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்.