Home ஆண்கள் ஆண்குறி விரைப்படைய செய்ய இவற்றை செய்யுங்கள்

ஆண்குறி விரைப்படைய செய்ய இவற்றை செய்யுங்கள்

86

விறைப்பு செயல் பிறழ்ச்சி என்பது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இப்பிரச்சனையை தீர்க்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி வயாக்ரா மாத்திரைகள் தான்.

ஆனால் திடமான நீண்ட நேர விறைப்பை பெற அது மட்டுமே வழியல்ல என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். திருப்திகரமான விறைப்பை பெற அதையும் தாண்டி ஆரோக்கியமான பல வழிகள் இருக்கத் தான் செய்கிறது.

விறைப்பு செயல் பிறழ்ச்சியை எண்ணி வருத்தமடைந்துள்ள ஆண்கள் சில வகை உணவுகளை உட்கொண்டு, சில வழிகளை பின்பற்றி இப்பிரச்சனைக்கு தீர்வை காணலாம். நம் நாட்டில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை எண்ணி வெட்கப்பட தேவையே இல்லை. இதுப்போன்று சுவாரஸ்யமானவை: நீங்க ´அதுல´ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… மன அழுத்தம், நம் உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் தான் இந்த விறைப்பு செயல் பிறழ்ச்சி ஏற்படுகிறது.

இருப்பினும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் தான் ஆண்களுக்கு இந்த விறைப்பு செயல் பிறழ்ச்சி அதிகமாக ஏற்படுகிறது. அதனால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

ஆரோக்கியமான முறையில் திடமான விறைப்பை பெற உங்களுக்காக சில வழிகள் இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்?உங்களுக்காக நாங்கள் என்ன சொல்ல போகிறோம் என்பதை படியுங்கள். ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை தான் என்பதால் இதனை கண்டு பயப்படவும், வெட்கப்படவும் எதுவும் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ப்ளாக்பெர்ரி என்பது கருமையான ஒரு பழமாகும். அதிகளவிலான அந்தோசையானின்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்சிடன்ட்கள் இதில் அடங்கியுள்ளது. அதனால் திடமான விறைப்பை பெற இது உதவும். தினமும் தூங்குவதற்கு முன்பாக ஒரு கப் ப்ளாக்பெர்ரிகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான பயனை அடையலாம்.

உங்களுக்கு ஆரோக்கியமான முறையில் திடமான விறைப்பு வேண்டுமானால் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டியது கட்டாயமான விதிமுறையாகும். புகைப்பிடிக்கும் பழக்கம் உங்கள் விறைப்பின் தன்மையை குறைக்கும்.

டார்க் சாக்லெட் என்பது பாலுணர்ச்சி ஊக்கியாகும். இது உங்கள் ஆற்றல் திறனை அதிக அளவில் அதிகரிக்கும். உடலுறவு கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஆண்கள் டார்க் சாக்லெட்டை எடுத்துக் கொண்டால் நல்ல பயனை பெறலாம்.

மாதுளைப்பழ சாற்றில் அதிகளவில் ஆற்றல் திறன் உள்ளது. ஆண்களுக்கு இயற்கையான முறையில் திடமான விறைப்பு வேண்டுமென்றால் மாதுளைப்பழ சாற்றை பருகுங்கள். படுக்கையில் தன் சக்தியை காட்ட ஒரு கப் மாதுளைப்பழ ஜூஸ் போதுமானது.

விறைப்பு செயல் பிறழ்ச்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களில் 70 சதவீத பேர்கள் அக்குபஞ்சர் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இது நேர்மறையான பயனை அளித்துள்ளது. இயற்கையான முறையில் திடமான விறைப்பை பெற இது பெரிதும் உதவுகிறது.

வெள்ளைப் பூண்டில் அல்லிசின் என்ற பொருள் உள்ளது. இது உங்கள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நீங்கள் உண்ணும் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொண்டால் இயற்கையான முறையில் ஆரோக்கியமான, திடமான விறைப்பை பெறுவீர்கள்.

ஒரு ஆண் தன்னை எப்போதும் உடற்பயிற்சி மூலம் கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இயற்கையான முறையில் திடமான விறைப்பை பெறலாம்.

உங்கள் உணவு பழக்கத்தின் மீது போதிய கவனம் தேவை. உங்களுக்கு விறைப்பு செயல் பிறழ்ச்சி பிரச்சனை இருந்தால்,உங்கள் ஆற்றல் திறன் அதிகரித்து,இனப்பெருக்க உறுப்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகமாக செலுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

Previous articleஃபேஷனுக்காக தொப்புள், நாக்குகளில் வளையம் போடுறவங்களா?
Next articleஅதிக நேரம் உறவில் ஈடுபட வேண்டுமா? என்ன செய்யவேண்டும்?