Home சூடான செய்திகள் தாம்பத்யம் சிறப்பாக அமைய என்ன செய்யலாம்?

தாம்பத்யம் சிறப்பாக அமைய என்ன செய்யலாம்?

27

hqdefault1. செக்ஸ் பற்றி எப்போது, எப்படி விவாதிப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்பதை இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ள வேண்டும். உடலுறவு முடிந்ததும் பேசுவது சிலருக்கு இதமாக இருக்கும். சிலருக்கு மறுநாள் ஓய்வு நேரத்தில் பேசுவது பிடிக்கும்.
2. பேசும்போது எனக்கு இவ்வாறு இருந்தால் பிடிக்கும். நான் இதுபோன்று விரும்புகிறேன் என எடுத்துக்கூறுங்கள். உனக்கு இவ்வாறு செய்யத் தெரிய வில்லை என புகார் கூறாதீர்கள்.
3. புதிதாகப் படித்த புத்தகத்திலிருந்தும், பத்திரிகைகளிலிருந்தும் யோசனைகளைத் தெரிவிக்கலாம்.
4. ஒரு குறிப்பிட்ட செக்ஸ் முறை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களையே நிராகரித்ததாக நினைக்காதீர்கள். உதாரணமாக வாய்வழி செக்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். உங்கள் மனைவி அதை விரும்பவில்லை எனில், உங்களையே அவர் விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளாதீர்கள்.
5. உங்கள் கணவருக்கு ஒரு குறிப்பிட்ட செக்ஸ் முறை பிடிக்கும் என்பதால், எப்போதுமே அதையே செய்து கொண்டிருக்க வேண்டும் என அர்த்தமில்லை. மாறுதல்கள் சில நேரங்களில் உன்னதமாக இருக்கலாம்.
6. எல்லா மனிதர்களும், எல்லா நேரங்களிலும் உடலுறவில் ஈடுபட விரைப்புத் தன்மை அடையவேண்டியதில்லை. சில நேரங்களில் விரைப்புத்தன்மை அடைய முடியாமல் போகலாம். அவ்வாறு இருந்தால் பயப்படத் தேவையில்லை. எல்லோருக்கும் எப்போதாவது நேர்வதுதான் இது. தொடர்ந்து விரைப்புத்தன்மை இல்லாது போனால் மனைவிக்கும் தெரிவித்து, செக்ஸ் மருத்துவ ஆலோசகரை நாடுங்கள். நீங்களும் மனைவியும் இதைப்பற்றி சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள்.
செக்ஸ் பற்றி பேசுவது, புதிய நடவடிக்கையில் இறங்குவது நல்ல பெண்ணுக்கு அழகல்ல, அதிக செக்ஸ் உணர்வை காட்டுவது, வெளிப்படுத்துவது, நாடுவது நல்ல பெண்ணிற்கு அடையாளமல்ல என்ற கருத்து நம் நாட்டில் நிலவுகிறது.
திருப்தி அடைந்ததை மனைவி கணவனிடம் காட்டுவது அல்லது அதிருப் தியை காட்டுவது தவறு என்று எண்ணுகிறார்கள் பெண்கள். இந்த எண்ணம் கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது பல பெண்களுக்கு தெரிவதில்லை. திருப்தியை வெளிப்படுத்தும்போது கணவனுக்கு மனைவி மீது கூடுதல் அன்பும், பாசமும், நேசமும் உண்டாகிறது. அதிருப்தியைச் சொல்லும் போது, கணவனிடம் செல்லமாக அனுசரணையுடன் கூறவேண்டும். இது போன்றே கணவனும் மனைவியிடம் தனது திருப்தி, அதிருப்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
செக்ஸ், வாழ்நாள் முழுவதும் விருப்பமான ஒரு செயலாக இருக்க வேண்டுமெனில்- செக்ஸில் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
செக்ஸைப் பொறுத்தவரையில், புரிதல் என்பது சமமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இரண்டு பேருக்கும் புரிதல் இருக்கலாம். இதனை மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவை மூலம் தீர்க்கலாம்.
ஒரு நடவடிக்கை கணவனுக்குப் பிடித்து, மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றால்- பிடிக்காததை மேற்கொள்ளுமாறு மனைவியிடம் கணவன் வற்புறுத்திடக்கூடாது. அந்த செய்கை தவறல்ல என்பதை புரிய வைத்து, மனைவிக்கு விருப்பம் உண்டானால் ஈடுபடலாம்.
மணமாகி பல ஆண்டுகளான தம்பதிகளிடம்கூட, வெளிப்படையாக தங்கள் செக்ஸ் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. வயதான பின்பும்கூட பலர் செக்ஸ் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். இது நவீன யுகம். பரஸ்பரம் செக்ஸ் பற்றி தம்பதிகள் எந்த கூச்சமும் இல்லாமல் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்புகள் உள்ளன. நல்ல செக்ஸ் டாக்டரின் ஆலோசனை களைப் பெற்று தங்கள் மனக்குறைகளைப் போக்கிக்கொள்ள முன் வரவேண்டும்