Home சூடான செய்திகள் பெண்கள் சரியான உள்ளாடை அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்

பெண்கள் சரியான உள்ளாடை அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்

38

பெண்களே புற ஆடை அணிகலன்கள் குறித்தும் எவ்வளவு சிரத்தை எடுத்து கவனித்துக் கொள்கிறோமோ, அதே அளவு உடலின் உட்தோற்றம் மற்றும் உள்ளாடைகள், ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சரியானது தானா? அது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா? இல்லை தீமையை ஏற்படுத்துகிறதா? என்பன பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியம்..!

பெண்களே! நீங்கள் அணியும் உள்ளாடை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அளவில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்கும். உள்ளடையானது உங்கள் மார்பின் முழு எடையையும் தாங்கக் கூடியதாய், மார்பிற்கு சரியாய் பொருந்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உங்கள் உள்ளாடை சரியானதாய் இல்லாவிடின், முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் போன்றவை ஏற்பட்டு, மார்பகங்களும் பொலிவினை இழந்து, மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து, தொங்கிப் போய் விடும்.

இன்றைய சூழலில், 10ல் 8 பெண்கள் சரியான உள்ளாடையை அணிவதில்லையென்று சமீபத்திய ஆய்வினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;

88% இளம் பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை எனவும், 85% பெண்கள் எந்த உள்ளாடை தங்களுக்குப் பொருத்தமானது என்ற விழிப்புணர்வு இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பிரச்சனைகள் அனைத்தும், பெண்களின் குழப்பம் காரணமாகவும், உள்ளாடைகளை அணிந்து பார்த்து வாங்காததன் விளைவாகவும், தங்கள் அளவுகள் குறித்து அளந்து அறியாமல், ஏதோ ஒரு உள்ளடையை வாங்கி அணிவதன் விளைவாகவும் ஏற்படுகிறது.

உள்ளாடைகள் மார்பகத்தை ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொள்ள மட்டுமல்ல; இது உங்கள் உடலின் நலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளாடைகள் காற்றோட்டமானதாக, சரியான அளவு உடையதாக மேலும் பாதுகாப்பதானதாக இருத்தல் அவசியம்..! இவற்றை குறித்த பெண்களின் விழிப்புணர்வு குறைவே! பெண்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தாய்மார்களே முன்வந்து உதவிட வேண்டும்..!