Home பெண்கள் பெண்குறி பெண்களே உங்கள் மர்ம உறுப்பு பற்றிய மருத்துவக் குறிப்பு

பெண்களே உங்கள் மர்ம உறுப்பு பற்றிய மருத்துவக் குறிப்பு

166

பெண்கள் மருத்துவம்:நீங்கள் உங்களை மிக தூய்மையாக வைத்துக் கொண்டாலும், அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்படுவது இயல்பானது தான். இதை பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த தொற்றுகள் இந்த பகுதி முழுவதும் மற்றும் ‘வல்வா’ பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்த கூடியது. இந்த கட்டுரையில் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் எதனால் இவை ஏற்படும் என பார்க்கலாம்.

காரணங்கள் சில பெண்களுக்கு இந்த தொற்றுகள் அடிக்கடி ஏற்படும். இது வருவதால் அவர்கள் தங்களை தூய்மையாக பராமரிக்கவில்லை என்றோ, தவறான பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்றோ அர்த்தம் இல்லை.

காண்டம் மாற்றாதது தொற்றுகள் ஏற்பட இதுவும் ஒரு காரணம். காண்டம் பயன்படுத்தாத போது ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு தொற்றுகள் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது. ஃபிகல் பாக்டீரியா இந்த தொற்றுகளுக்கு காரணம் ஆகும்.

ஆன்டிபயாட்டிக் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளால் தொற்றுகள் ஏற்படுகிறது என சொன்னால் எல்லாரும் ஆச்சரியம் அடைவார்கள். பாக்டீரியாக்களை கொல்ல கூடிய இந்த மாத்திரைகள் எப்படி தொற்றுகளை ஏற்படுத்தும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இது நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களையும் அழித்து விடுவதால் அந்தரங்க பகுதியில் எளிதாக பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன.

ஹார்மோன் மாற்றம் ஹார்மோன் மாற்றத்தினால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகமாவதால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு பொதுவாக கர்ப்ப காலத்தில், ஹார்மோனல் திரப்பி எடுத்து கொள்ளும் போது அல்லது மெனோபாஸ் காலத்தில் அதிகமாக ஹார்மோன் மாற்றம் ஏற்படும்.

ஸிந்தடிக் உடைகள் நம் அனைவருக்குமே தெரியும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் சூடான, ஈரப்பதம் மிகுந்த மற்றும் போதிய காற்றோட்டம் இல்லாத எல்லா இடங்களிலும் எளிதாக தொற்றிவிடும்.

இறுக்கமான பேண்ட் சிந்தடிக் துணியால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகள், லைக்ரா பேண்ட் மற்றும் லெக்கிங்ஸ் போன்ற ஆடைகள் அணிவதால் அந்தரங்க பகுதியில் தொற்றுகள் ஏற்படும். குறிப்பாக ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுகின்றன. உங்களுக்கு ஈறுக்கமான பேண்ட் அணிவது மிக பிடித்தால் குறைந்தது 10 மணி நேரத்திற்கு பிறகு கழற்றி விடுங்கள் அல்லது வேறு பேண்ட் மாற்ற முயற்சி செய்யுங்கள். மேலும் இதே போல ஆடைகள் வாங்கும் போது அவை 50% காட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குங்கள்.

அதிக இரத்த சர்க்கரை அளவு பொதுவாகவே சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஈஸ்ட் கிருமியும் இனிப்பு சுவையை விரும்புவதால், நீரிழிவு நோய்க்கும் ஈஸ்ட் தொற்றுக்கும் தொடர்பு உள்ளது. கொழுப்பு மற்றும் சர்க்கரையை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே ஆரோக்கியத்திற்கு நல்லது அதே சமயம் உடலுக்கு நோய் தொற்றுவதும் குறையும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் சர்க்கரை அளவை மிக கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

அந்தரங்க தொற்றுகளின் வகைகள் இந்த பகுதியில் வரும் எல்லா தொற்றுகளும் சமம் இல்லை. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதத்தில் கையாள வேண்டும். மைகோசிஸ் அல்லது பூஞ்சை தொற்றுகள் இது பொதுவானது. இந்த பூஞ்சை தொற்றில் * அடர்ந்த திரவம் வெளியேறும் * அந்தரங்க பகுதியில் சிவத்தல் * அரிப்பு போன்றவைகள் ஏற்படுகிறது. இதனை குணப்படுத்துவது எளிதானது. இதற்கான ஆயில்மென்ட் அல்லது கீரிம் மருந்து கடைகளில் கிடைக்கும்.

பாக்டீரிய தொற்றுகள் இது திருமணம் முடிந்த பெண்களுக்கு எளிதாக வரக்கூடியது. இது சில நோய் தொற்றுகளுக்கு காரணமாகிறது. இதன் அறிகுறிகள் : 1. உடலுறவுக்கு பின் நாற்றத்துடன் அந்தரங்க பகுதியில் இருந்து திரவம் வெளியேறுவது. 2. சிறுநீர் கழிக்கையில் வலி 3. நிறமற்ற அல்லது வெள்ளை நிறத்தில் திரவம் 4. வலி மற்றும் எரிச்சல்

ட்ரைகோமோனஸினால் ஏற்படும் தொற்றுகள் இது ட்ரைகோமோனஸ் வஜினாலிஸ் என்று நுண்ணுயிர் கிருமியால் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பரவுகிறது. இதன் அறிகுறிகள் : * வஜினாவில் நாற்றம் * பச்சை அல்லது மஞ்சள் நிற திரவ வெளியேற்றம் * வஜினாவில் அரிப்பு அல்லது எரிச்சல்

கிளாமிதியா இது உடலுறவினால் பரவக்கூடிய ஒரு நோய் தொற்று ஆகும். இது வஜினாவில் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆர்த்ட்ரிஸ், நிமோனியா மற்றும் கண்களில் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் வஜினாவில் இருந்து நாற்றத்துடன் வெள்ளை நிற திரவம் வெளியேறும்