Home ஆரோக்கியம் பெண்கள் கவனிக்காமல் விடும் ஆபத்தான நோய்கள்

பெண்கள் கவனிக்காமல் விடும் ஆபத்தான நோய்கள்

130

பெண்கள் பொதுமருத்துவ தகவல் :காய்ச்சலோ வயிற்றுக்கோளாறோ கவலைக்குரிய ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், சில அறிகுறிகள் உங்கள் உடலில் ஏதோ சரி இல்லை என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது போன்ற அறிகுறிகளில் சில கீழே வழங்கப்பட்டுள்ளன:

கடுமையான வயிற்றுவலி அல்லது இடுப்பு வலி (Sharp stomach pain or pelvic pain)
வயிற்று வலி என்பது உண்ணும் உணவு அல்லது வாயுவினால் மட்டுமே ஏற்படும் என்று கருதி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எளிதில் விட்டுவிடுவோம். இருப்பினும், வலி, வயிற்றுப் பொருமல் அல்லது மலம் கழித்தலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் அல்லது IBS (எரிச்சல் கொண்ட குடல் நோய்) ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

திடீர் எடை அதிகரிப்பு அல்லது எடை குறைவு (Sudden weight gain or weight loss)
நீங்கள் என்ன சாப்பிட்டாலும், எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், அது வேறு ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும் அல்லது தைராய்டு பிரச்சனையாகவோ பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதே போன்று, நீங்கள் முயற்சி செய்யாமலேயே உங்கள் எடை குறைந்தால், அதற்கு தைராய்டு அதீத செயல்பாடு, நீரிழிவுநோய் அல்லது குளூட்டன் ஒவ்வாமை அல்லது மலக்குடல் அழற்சி போன்ற குடல் பிரச்சனைகள் காரணமாக இருக்கக்கூடும்.

அசாதாரண இரத்தப்போக்கு அல்லது வெள்ளைப்படுதல் (Abnormal bleeding or discharge)
மாதவிடாய் நாட்கள் இல்லாமல் மற்ற நாட்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது நோய்த்தொற்று முதல் புற்றுநோய் வரை எந்தப் பிரச்சனையின் அடையாளமாகவும் இருக்கலாம். அதே போல், வெள்ளைப்படுதலில் வழக்கத்திற்கு மாறாக நிறம், வாடை அல்லது வெளியேறும் அளவில் மாற்றம் இருந்தால், அது நோய்த்தொற்று அல்லது பாக்டீரியாவின் அதீத வளர்ச்சியைக் குறிக்கலாம்.

சிறுநீர் கழிக்கும்போது வலி (Painful urination)

பெண்களே UTI (சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று) பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவதே இதன் ஆரம்ப அறிகுறியாகும். இவ்வாறு ஏற்பட்டால், உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக செயல்படுவது சிறந்தது. உங்கள் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும் புதிய சானிட்டரி தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் அல்லது உடலுறவு போன்ற காரணங்களால் கூட வலி ஏற்படலாம், இருந்தாலும் சோதனை செய்துகொள்வது நல்லது, சோதனைக்காக உங்கள் சிறுநீர் மாதிரியை கொடுத்தால் போதும்.

மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் (Chest pain or breathlessness)

மார்பு வலி உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். ஆம், எல்லா வலியும் மாரடைப்பாகாது இருப்பினும் – வருமுன் காப்பது நல்லது! அசாதாரண சோர்வு அல்லது வியர்வை போன்றவை உங்கள் இதயத்தில் பிரச்சனை இருக்கலாம் என்பதைக் குறிக்கக்கூடிய சில நுட்பமான அறிகுறிகளாகும்.

மார்பகத்தில் மாற்றங்கள் (Breast changes)
உங்கள் மார்பகத்தின் வடிவம் மற்றும் அளவைத் தெரிந்துகொள்வதற்கு சுய மார்பக பரிசோதனை செய்துகொள்வது மிக முக்கியம். இந்த முறையில் தான் கட்டிகள், தடிப்பு அல்லது முலைக்காம்பில் இருந்து திரவம் வெளியேறுதல் போன்ற மாற்றங்களை உங்களால் கண்டறிய முடியும். இந்த மாற்றங்களில் எவற்றையேனும் நீங்கள் தெரிந்துகொண்டால், பயப்படாமல், உங்கள் மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்கவும்.

தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் (Lack of sleep or too much sleep)
சில பெண்கள் அதிகமாக தூங்குவார்கள், சிலர் தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள் அல்லது தூங்கமாலே இருப்பார்கள். இவை இரண்டுமே உடல்நலப் பிரச்சனையின் அறிகுறிகளாகும். போதுமான தூக்கம் கிடைத்த பின்னும் தூக்கமாகவே உணர்வது, குறைவான தைராய்டு செயல்பாடு, நரம்பு வீக்கம் அல்லது மன இறுக்கம் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம். அதே சமயம், தூக்கமின்மையானது முடக்குவாதம், மிகை தைராய்டு செயல்பாடு அல்லது சைனஸ் தொற்றுநோய் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

இந்த அறிகுறிகள் அல்லாது வேறு ஏதேனும் பிரச்சனை தொடர்ந்து இருந்தால் அல்லது புதிய அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியாமாகும். முக்கியமாக, வரும் முன் காப்பதே நல்லது.

Previous articleநான் கணவனுடன் தாம்பத்தியம் இல்லாத நேரத்தில் சுயஇன்பம் கொள்கிறேன் சரியா ?
Next articleகாதலன் காதலி உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் ரொமாண்டிக் வார்த்தைகள்