Home பெண்கள் அழகு குறிப்பு கை முடியில் உள்ள கருமையை போக்கி, மென்மையாக்க இதோ குறிப்புகள்.!

கை முடியில் உள்ள கருமையை போக்கி, மென்மையாக்க இதோ குறிப்புகள்.!

25

இன்றைய காலத்தில் பெண்களுக்கு தன்னை அழகாக காட்டிக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதால், பல வகையில் பணத்தை செலவு செய்து உடல் முழுவதையும் அழகாக வைத்துக்கொள்கிறார்கள். சில பெண்கள் அழகு நிலையங்களிலேயே அதிக நேரத்தை செலவு செய்கிறார்கள். முகத்தை மட்டும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்காத பெண்கள், உடல் முழுவதும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கைகளை அழகாக வைத்துக்கொள்ள இவ்வளவு எளிதான விஷயங்கள் இருக்கும்போது எதற்காக பணத்தை வீணடிக்கவேண்டும். முழங்கையில் உள்ள கருப்பு மாற தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கை கழுவினால் முழங்கை கருப்பு மாறும்.

மேலும், கை முடியில் உள்ள சொரசொரப்பு குறைய,கோதுமை மாவு, பாலேடு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் கை முட்டியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கை முட்டியை கழுவினால் கை முட்டி சொரசொரப்பு குறையும். அதைத்தொடர்ந்து, உள்ளங்கை மிருதுவாக மாற, ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து தினமும் உள்ளங்கைகளில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் கை கழுவினால் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.