Home பெண்கள் அழகு குறிப்பு பெண்கள் உங்கள் முடி வலிமைக்கும் அடர்த்திக்கும் ஒரு டிப்ஸ்

பெண்கள் உங்கள் முடி வலிமைக்கும் அடர்த்திக்கும் ஒரு டிப்ஸ்

141

அழகு குறிப்பு:கோடை என்றாலும், குளிர் என்றாலும், மழை என்றாலும் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சினை இந்த தலைமுடி உதிர்வது.

இதற்கு காரணம் உடலில் வெப்பநிலை அதிகரிப்பதும், அதிகம் வியர்வை வெளியேறுவதும் தான். கோடையில் மயிர்க்கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த நேரத்தில் முடியை சீப்பு கொண்டு அடிக்கடி சீவினால், தலை முடி அதிகம் உதிர்ந்துவிடும். மயிர்க்கால்கள் ஈரப்பசையுடன் இருப்பதால் தலையில் தூசுக்கள் எளிதாக ஒட்டிக்கொண்டு, கிருமிகளை உருவாக்கிவிடும். இதனால் தலை அரிப்பும், எரிச்சல்களும் ஏற்படலாம்.

கோடையில் தலைமுடி பராமரிப்பு
குறிப்பாக கோடையில் பெண்களின் டோலோஜின் சற்று அதிகமாக இருக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. டோலோஜின் என்பது மயிர்க்கால்களை இளைப்பாற்ற வைக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும். கோடையில் தலைமுடிக்கும் அதிக அழுத்தத்தை ஏற்படும் செயல்களை செய்யும்போது தலைமுடி அதிகளவில் உதிர்கிறது. இந்த முடி உதிர்தலை தடுப்பதற்கான சில வழிமுறைகளையும், எந்த காலம் என்றாலும் உங்களது தலைமுடியின் 10 மடங்கு வலிமையுடன் திகழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்கே பார்ப்போம்.

கோடையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிப்பது சாலச் சிறப்பு. தலையை நன்கு துவட்டி, பிறகு லேசான சூரிய ஒளியில் உலரவைக்க வேண்டும். குளிர் காலத்திலும், மழைக்காலத்திலும் வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலே போதுமானது. மழையில் நனைந்தால் ஈரம் போக நன்கு துவட்டிக்கொள்ள வேண்டும்