Home பெண்கள் அழகு குறிப்பு முகம் மட்டும் அழகில்லை, கை, கால், கழுத்து என அனைத்தையும் அழகாக்க குறிப்புகள்

முகம் மட்டும் அழகில்லை, கை, கால், கழுத்து என அனைத்தையும் அழகாக்க குறிப்புகள்

32

முகம் மட்டும் அழகில்லை, கை, கால், கழுத்து என அனைத்தையும் அழகாக்க குறிப்புகள்
இந்த காலத்தில் அனைவரும் அவரவர் தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது நாம் அறிந்ததே. முகத்தில் மட்டும் அழகு இல்லை, முழு உடலையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். கை, கால், கழுத்து, விரல்கள் என அனைத்தையும் நன்கு பராமரித்தால் தான் நீங்கள் அழகானவராகவும் சுத்தமானவராகவும் தெரிவீர்கள்.

கழுத்து, கால் கருப்பான இடங்களில் சோப்பு போட்டு பீர்க்கங்காய் கூடு வைத்து நன்றாக தேய்த்து குளித்து வந்தால் அங்குள்ள கருப்பு குறைவதோடு அழுக்கும் போய்விடும். பின் அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும்.

பிறகு அதை ந‌ல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும். மேலும், முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி அளவு பாலில் கலந்து காலை, மாலை என்று சாப்பிட்டு வர வேண்டும். அப்படி செய்தால் உடல் பொலிவு உண்டாகும்.

Previous articleகாம உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா …!
Next articleமாதவிடாய் வராமல் தவறுவதற்கான சில வேறுபட்ட காரணங்கள்