Home உறவு-காதல் ஆண் நண்பனுடன் காதலில் விழும் பெண் ஏன் தெரியுமா?

ஆண் நண்பனுடன் காதலில் விழும் பெண் ஏன் தெரியுமா?

331

Friends fall in Love:கணவன் மனைவி என்று மட்டுமில்லாமல், சகோதரர்கள், பெற்றோர்கள் என அனைத்து உறவிலும் ஓர் நட்பு உணர்ச்சி இருந்தால் அந்த உறவு கண்டிப்பாக சிறந்து விளங்கும். இதனால், உறவில் ஒளிவுமறைவு இருக்காது, ஈகோ, அகம்பாவம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை குறைக்கலாம்.

முக்கியமாக நெருங்கிய நண்பர்களை காதலிக்கும் பெண்கள், அவர்கள் மீது காதல் கொள்வதற்கும், அவர்களுடன் இல்லற வாழ்வில் இணைவதற்கும் சில காரணங்கள் கூறுகின்றனர், அவை என்னென்ன என்று இனிக் காண்போம்…

காரணம் #1

தன்னை முழுவதுமாக அறிந்தவன். தன் இன்பம், துன்பம், எதற்காக சிரிப்பேன், எதற்காக அழுவேன் என அனைத்தும் தெரிந்த ஓர் நபர்.

காரணம் #2
குடும்பத்தாரிடம் புதியதாக அறிமுகப்படுத்த தேவை இல்லை. மேலும், தன் குடும்பத்தாருக்கும் நன்கு பரிச்சையமானவராக இருப்பார்.

காரணம் #3
காதல்

எனது இறந்தகாலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்ன என அனைத்தும் தெரிந்தும், அறிந்தும் உறுதுணையாக இருக்கும் நபர்.

காரணம் #4
ஏற்கனவே ஓர் ஈர்ப்பு, அணைப்பு, புரிதல், அன்பு, நேசம் என அனைத்தும் கலந்த உறவு. எனவே, இதைவிட சிறந்த துணையாக வேறு யார் இருக்க முடியும்.

காரணம் #5

என் தோல்வி, வெற்றி, எதற்காக நான் போராடுகிறேன் என எனது இரு பக்கங்களையும் அறிந்த நபர். எனது வெற்றிக்காக கண்டிப்பாக முனைப்புடன் செயல்பட கூடியவரும் கூட.

காரணம் #6

ஒர்விதமான அசௌகரிய உணர்வு இருக்காது. இல்வாழ்க்கை எப்போதும் போல ஸ்மூத்தாக மற்றும் ஓர் சுவாரஸ்யத்துடன் பயணிக்கும்.

காரணம் #7

அவனது இலட்சியங்கள் என்ன, அவன் எதை சாதிக்க விரும்புகிறான் என நன்கு அறிவேன். நானும், அவனுக்கு உறுதுணையாக செயல்பட முடியும்.

காரணம் #8

எந்த ஒரு உறவிலும் தோழமை உணர்வு அதிகமாக இருந்தால் அந்த உறவு சிறந்து விளங்கும் என்பார்கள். காதல் மற்றும் திருமணத்திலும் இது நேர்ந்தால் சிறப்பாக தானே இருக்கும்.