Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இளம் பெண்களின் மார்பகங்கள் அழகாக செய்யவேண்டியவை

இளம் பெண்களின் மார்பகங்கள் அழகாக செய்யவேண்டியவை

174

உடல் கட்டுபாடு:வயதாக வயதாக, முதுமை காரணத்தால் தோல் சுருங்கி, தளர்ந்து போதல் என்பது இயல்பான மாற்றமே! அதிலும் மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது முதுமையின் காரணமாக பெரும்பாலுமான பெண்களில் நிகழ்வதே! சில சமயங்களில் மார்பகங்கள் தளர்ந்து போதல், திருமணமாகி 40 வயது ஆனவுடனேயே கூட ஏற்படலாம்; இதனை சில சரியான உடற்பயிற்சி, உடை மற்றும் உணவு முறைகளை பின்பற்றி சரி செய்து விடலாம்.

ஆனால், மார்பகங்களின் மாற்றம் அதாவது மார்பகங்கள் தொங்கிப்போதல் என்பது, தற்பொழுதைய காலகட்டத்தில் இளம் பெண்களிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனால், இளம் பெண்கள் தங்கள் நம்பிக்கையை குறைந்தவர்களாக, அழகு கெட்டுவிட்டதாக அல்லது அழகை முற்றிலும் இழந்தவர்களாக உணர்கின்றனர். இந்த உணர்வு அவர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை தந்து மேலும் அவர்களின் அழகை குறைக்கிறது. இளம் பருவத்திலேயே ஏற்படும் மார்பக தளர்வை போக்குவது எப்படி என்பது குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்.

உடை நீங்கள் அணியும் உடை சரியானதாக, சரியான அளவில் பொருந்தக்கூடியதாக இருந்தால், உடலானது சரியான உடலமைப்பை பெற்றுவிடும். ஆகையால், தோழியரே! நீங்கள் அணியும் மேலாடை மற்றும் உள்ளாடைகளில் கவனம் செலுத்துங்கள். மேலாடையை எப்படி உங்கள் அளவிற்கு ஏற்றவாறு வாங்குகிறீரோ அதே போன்று உள்ளாடையையும் சரியான அளவிற்கு வாங்குங்கள். ஆடைகளை வாங்கி மட்டும் வைத்துவிடாமல் தினசரி உள்ளாடை அணிதல் அவசியம். வேலைக்கு செல்லும் பொழுது, விடுமுறை நாட்களில் என அனைத்து நாட்களிலும் காலை முதல் இரவு தூங்கப் போகும் வரை உள்ளாடை அணிந்திருத்தல் அவசியம். தூங்கும் போது உள்ளாடையின்றி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இறுக்கமான உள்ளாடை அணிந்தால், அது உங்கள் உடலில் கருமை, ஸ்கின் டேக், பரு அல்லது பிற சரும பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகையால், இறுக்கமாகவும் இல்லாமல், லூசாகவும் இல்லாமல் சரியான அளவில் உடலுக்கு பொருந்தும் உள்ளாடைகளை வாங்கி கண்டிப்பாக தினமும் உபயோகிப்பது மார்பகங்களை சரியான வடிவமைப்பு பெற உதவும்.

உடற்பயிற்சிகள்
உடல் உறுப்புகள் கட்டுக்கோப்பான அமைப்பு பெற சரியான மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சிகள் அவசியம். அதிலும் மார்பக தசைகளை சிக்கென்று வைக்க புஸ் அப்ஸ் மற்றும் பிற மார்பக தசைக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம். உடலின் கொழுப்பை குறைத்து அவற்றை தசைகளாக மாற்றும் பொழுது, அது உங்களின் உடலின் சாதாரண சதைகளை பெக்ட்டோரால் தசைகளாக மாற்றி, மார்பகத்தின் அளவை குறைக்க உதவுகின்றன. இவ்வாறு தசைகளை மாற்றுவது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதுடன், தொங்கும் மார்பகங்களை சரிப்படுத்தி, சிக்கென்று வைக்கவும் உதவும்

உணவுகள்

ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலை சீராக வைத்திருக்க இயலும். கண்ட உணவுகளை எல்லாம் உட்கொள்ளும் பொழுது, அவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதற்கு பதிலாக, உடலின் அடித்தள ஆரோக்யத்தையே கெடுத்து விடுகின்றன. உடலின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவுகளின் தன்மையை சார்ந்தே இருக்கிறது. அதனால், உடலை கட்டுக்கோப்பாகவும் இளமையாகவும் வைக்க தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதங்கள் உங்கள் உணவில் இடம் பெறுகின்றனவா என்று சோதித்து, அதற்கேற்றவாறு ஆரோக்கிய உணவுகள் அடங்கிய உணவு அட்டவணையை தயாரித்து அதை பின்பற்றி வருதல் அவசியம். இவ்வாறு செய்வது, ஆரோக்கியமான நோய் நொடியில்லாத தேகம், வஜ்ரம் போன்ற உடலமைப்பு கூடிய தசைகளை உங்கள் உடலில் உருவாக்கும். வாரத்தில் ஓரிரு முறை உங்களுக்கு பிடித்த அசைவ உணவுகள், பீட்ஸா, பர்கர் போன்றவற்றை உட்கொள்ளலாம்; கூடுமானவரை உட்கொள்ளாமல் தவிர்க்க முயலுங்கள்.

உடல் எடை
பருமனான தேகம் கொண்டவர்களில் தொங்கும் மார்பகங்கள் இயல்பாகவே ஏற்பட்டு விடுவதை நம்மால் காண முடிகிறது. இது மார்பகமோ உடலோ தளர்ந்ததால் ஏற்படுவதல்ல; உடலில் சேர்ந்த அதிகப்படியான எடையால், கொழுப்பால் உருவானது. ஆகையால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியமான ஒரு காரியமாகும்.

எனவே, தினமும் 30-60 நிமிடங்கள் எளிய நடைப்பயிற்சி, நடனம் ஆடுவது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் உயரத்தைக் கொண்டு கணக்கிடப்படும் உடல் குறியீட்டு எண் அதாவது BMI – பாடி மாஸ் இண்டெக்ஸ் சரியானதாக இருக்கும் அளவிற்கு உடல் எடையை குறைக்க முயலுங்கள். செக்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்து உடல் எடையை குறைக்காமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுங்கள்; இது உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும்

மார்பகத்தின் மாற்றங்கள்

பெண்ணின் மார்பகங்கள் பருவத்திற்கு ஏற்றவாறு மாறக்கூடியவை; அதாவது சிறுமியாக இருக்கும் போது எவ்வித மாறுபடும் இல்லாது, பருவமடையும் குமரியாய் மாறுகையில், லேசான முக்கிய மாறுபாடுகள் ஏற்பட்டு, கன்னிப்பருவம் எய்தும் போது முழுவளர்ச்சியை பெறும். மேலும் வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணத்திற்கும் நுழையும் பொழுதோ, தாம்பத்தியத்தால் ஏற்படும் மாற்றங்கள், தாய்மையால் உண்டாகும் மாற்றங்கள் என சாதாரணமாக உண்டாகக்கூடிய மாற்றங்களை அறிவது அவசியம். இப்பருவ மாற்றங்கள் அசாதாரண மாற்றங்களில் இருந்து வேறுபட்டவை; இளம் பருவத்திலேயே தொங்கும் மார்பகங்கள் ஏற்படுவது என்பது உணவு, உடை மற்றும் பழக்க வழக்கத்தாலோ அல்லது ஹார்மோன் மாற்றத்தாலோ நிகழலாம்.

Previous articleஆண்களின் பாலியல் செய்பாடு பாதிக்க காரணம்
Next articleபிறப்புறுப்பில் தான் கமெரா வைக்கணும்..! – ஸ்ரீ ரெட்டி