Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் பாத வெடிப்புக்கு இயற்கையாக மற்றும் டிப்ஸ்

பெண்களின் பாத வெடிப்புக்கு இயற்கையாக மற்றும் டிப்ஸ்

62

பெண்கள் அழகு:பெண்கள் வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை கழுவி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும்.

இந்த பாத வெடிப்பிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டுவிடக் கூடாது. பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணி களை அணிந்தாலும் இது ஏற்படலாம்.

பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் வெடிப்பினால் ஏற்படும் தழும்புகள் அவ்வளவு எளிதாக மறைவதில்லை. இதோ அதை மறைய வைக்கும் சில எளிமையான டிப்ஸ்கள்…

1. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும். வெடிப்புகளும் விரைவில் மறையும்.

2. வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

3. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

4. வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

5. பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்